அண்மையில் தான் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கும் அக்ஷயா என்ற பெண்ணிற்கும் திருமணமானது. தனுஷ் தசை அயர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலே தன்னுடைய வாழ்க்கை நகர்த்தி வந்த சமயத்தில் அவருக்கு மறுவாழ்வு கொடுத்து அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார் நெப்போலியன்.
நெப்போலியனின் இந்த செயலை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் நெப்போலியனின் பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, எனக்கு திருமணம் ஆன புதிதில் எனது மனைவி ஜெயசுதாவை நான் செல்லும் ஷூட்டிங்கிற்கு எல்லாம் கூடவே அழைத்து செல்வேன் .
தொடர்ந்து அவர் என்னுடன் பயணம் செய்து கொண்டே இருந்ததால் மூன்று முறை அடுத்தடுத்து அவருக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. அதனால் எங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என நாங்கள் மிகவும் வருத்தப்பட்டு கொண்டு இருந்த சமயத்தில் நான்காவது முறையாக கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து எனக்கு பிறந்த பிள்ளை தான் தனுஷ். எனவே எனவே அவன் எங்களுக்கு பொக்கிஷமான குழந்தை என நெப்போலியன் அந்த பேட்டில் கூறியிருக்கிறார்.