மாயமான நடிகை கஸ்தூரி… அக்கடா தேசத்தில் தேடும் தனிப்படை!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2024, 5:04 pm

நடிகை கஸ்தூரி அண்மையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசியது சர்ச்சையானது.

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கஸ்தூரி அவதூறாக பேசியதாக மாநிலம் முழுவதும் புகார் எழுந்தது. தெலுங்கு பெண்களை இழிவுப்படுத்தியதால் தெலுங்கு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விஷயம் நாடு முழுவதும் பரவி வைரலான நிலையல் மன்னிப்பு கேட்பதாக கூறினார். இந்த நிலையில் அவர் மீது சென்னை, மதுரை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்க: மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை ராயல் சல்யூட்.. ஏன் தெரியுமா?

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கஸ்தூரியில் விசாரணைக்காக சென்ற போது அவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது.

வீட்டை பூட்டி விட்டு தலைமறைவான கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர்.

Kasthuri Shankar

போலீசார் தேடுவது தெரிந்ததும் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது வழக்குபதியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 394

    0

    0