தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆகி பின்பு ஹீரோவாக வலம் வந்த நடிகர் சத்யராஜ்.சமீப காலங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறர் சத்யராஜ்.
குடும்ப வாழ்க்கை
சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்த லெவல் போனாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சோகமான சம்பவம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு திவ்யா என்ற மகளும் சிபி என்ற மகனும் உள்ளனர்.
சிபி தமிழ் சினிமாவில் நடிகராகவும் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும் உள்ளனர்.
நன்றாக போன சத்யராஜ் வாழ்க்கையில் ஓர் இடி விழுந்தது.அவரது மனைவிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் கடந்த 4 வருடங்களாக கோமாவில் உள்ளார்.
திவ்யா வேதனை
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சத்யராஜ் மகள் திவ்யா என்னுடைய அம்மாவிற்கு PEG டியூப் மூலம் தான் உணவளித்து வருகிறோம்.கடந்த 4 வருடங்களாக என் அப்பா சிங்கள் பேரண்டாக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: விருதை புறக்கணித்த டெல்லி கணேஷ்:மேடையில் நடந்த அதிர்ச்சி செயல்..!
என் அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என திவ்யா சத்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் நம்பிக்கையோடு சொல்லி இருப்பார்.