இப்படி ஒரு வாய்ப்பா? அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
Author: Hariharasudhan12 November 2024, 10:15 am
சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து 56 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்து, கடந்த சில நாட்களாக தங்கம் விலை, ஏற்றமும் இறக்கமுமாக காணப்பட்டது. இதனிடையே, நேற்றும் 50 ரூபாய்க்கு மேல் விலை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், இன்றும் 120 ரூபாய்க்கு மேல் அதிரடியாக குறைந்துள்ளது.
இதன்படி, இன்று (நவ.12) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 135 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 85 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து 56 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கோமாவில் பிரபல நடிகரின் மனைவி… சோகத்தில் மகள் ..!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 590 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.