கங்குவா படத்திற்கு புதுப்புது சிக்கல்.. என்னதான் பிரச்னை!

Author: Hariharasudhan
12 November 2024, 11:04 am

கங்குவா பட தயாரிப்பு நிறுவனம் 20 கோடி ரூபாயை சொத்தாட்சியரிடம் செலுத்திய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகவும் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 10 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரலாற்றுப் புனைவாக உருவாகி உள்ளது. இந்த நிலையில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியானது.

இதே தேதியில் தான் கங்குவா படமும் முதலில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தியேட்டர் கிடைப்பது, வணிகம் ஆகிய கூறுகளால் கங்குவா படம் வெளியீடு தள்ளிப்போனது. இதனை சூர்யாவே மேடையில் அறிவித்தார். அதன் பிறகு, அமரன் வெளியானது.

சிவகார்த்திகேயனின் இந்தப் படம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், கங்குவா திரைப்படம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது உறுதியானது. இந்த நிலையில் தான் அப்படத்தின் தயாரிப்பாளார் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் செக் வைத்து உள்ளது.

SURIYA ANGRY

இதன்படி, 20 கோடி ரூபாயை நவம்பர் 13ஆம் தேதிக்குள் சொத்தாட்சியரிடம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துகு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், இந்தப் பணத்தைச் செலுத்தாமல் கங்குவா படத்தை திரையிடக் கூடாது எனவும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயை கணவருடன் சேர்த்து வைக்கும் மணிரத்தினம் – ஓஹோஹ் விஷயம் அப்படி போகுதா?

முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 100 கோடி ரூபாயை திரும்பச் செலுத்தி உள்ளதாகவும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், அர்ஜூன் லால் என்பவரிடம் பெற்ற கடன் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், அடுத்த 4 – 5 நாட்களுக்கு வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ள நிலையில், கங்குவா வெளியீட்டில் இயற்கை இடர்பாடும் தற்போது வந்துள்ளது.

  • Bismi Criticized Nayanthara கண்ணை மறைத்த பண வெறி.. நயன்தாராவை விளாசிய பிரபலம்!!
  • Views: - 175

    0

    0