நடிகர் சூர்யாவின் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக ரிலீசுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது .
பெரும் பொருட்செளவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ. 1000 கோடி வசூல் ஈட்டும் என என்ற கணிப்புடன் பட குழுவினர் மும்முரமாக கடின உழைப்பை போட்டு உழைத்து வந்தனர். இப்படியான சமயத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் ரூ. 250 கோடிக்கு மேல் வசலீட்டி மாபெரும் சாதனை படைத்து வருகிறது.
ரூ. 1000 கோடி வசூல் என்பது மற்று மொழிகளில் அசால்டாக இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவுக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கனவை நினைவாக்கும் படமாக கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி ரிலீசுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவின் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் ரிலீசுக்கு முன்னரே 2000 கோடி வசூல் ஈட்டிவிடும் என தயாரிப்பாளர் ஞானவேல் ஓவராக பில்டப் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் சூர்யாவும் இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் .
ஆனால், தற்போது படத்தின் வசூல் பின்தங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. அதாவது படத்திற்கு தமிழ்நாட்டில் 900 திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் தான் எனக்கு கூறுகிறார்கள். அமரன் திரைப்படம் திரையரங்குகளில் சட்டை போடுவதால் அந்த படத்தை திரையரங்க உரிமையாளர்கள் தூக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் கங்குவா படத்திற்கு ரூ. 500 திரைகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஒருவேளை கம்மியான திரையரங்குகளில் கங்குவா படம் ரிலீஸ் ஆனால் அது அந்த படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும். இதனால் படத்தின் வசூலில் பின் தங்கிவிடும் என கணிப்புகள் கூறுகிறது. இதனால் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என கனவுகோட்டை கட்டிக் கொண்டிருக்கும் கங்குவா படத்தில் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் மண் அள்ளி போட்டு விட்டதாக கூறுகிறார்கள் திரைத்துறை வட்டாரம்.