மாயமான கள்ளக்காதலி… 2 நாள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி : அரங்கேறிய நாடகம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 November 2024, 6:28 pm

புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் இளவரசி (38), வீட்டு வேலை செய்து வந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து தனது 19 வயது மகன் மற்றும் 16 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனரான கிருஷ்ணப்பன் என்கிற ராஜி 52 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடையில் கள்ளக்காதலாக மாறி வீட்டில் இளவரசியின் பிள்ளைகள் இல்லாத போது கிருஷ்ணப்பன் இளவரசி வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பாக்கம் பகுதியில் உள்ள இளவரசியின் தாயார் ஆதிலட்சுமி வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அவரது மகன் மற்றும் மகள் வார இறுதி நாட்கள் விடுமுறைக்கு சென்றுள்ளனர்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் வீடு திரும்பிய போது அவர்களின் தாயார் இளவரசி வீட்டில் இல்லாததை கண்டு அக்கம் பக்கம் தேடி உள்ளனர்.

தாய் எங்கும் கிடைக்காத நிலையில் இதுகுறித்து நேற்று காலை நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் இளவரசியின் தாயார் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
இதற்கிடையே இளவரசியின் மகன் தனது தாயின் செல் போன் எண்ணிற்கு அழைத்தபோது எதிர் முனையில் இருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லுங்கள் என ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதை கண்ட அவரது மகன் தனது தாய்க்கு ஆங்கிலம் தெரியாது எனவும் இதில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செல்போன் எங்கிருந்து இயங்குகிறது என போலீசார் தடயம் செய்ததில் லாரி ஓட்டுனரான கிருஷ்ணப்பன் வீட்டில் செல்போன் இருப்பது தெரிய வந்தது

இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்தபோது தமக்கு எதுவும் தெரியாது என முதலில் அவர் கூறியுள்ளார்,

பின்னர் போலீசார் தங்கள் பாணியில் கிருஷ்ணப்பனிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் அவர் கடந்த சனிக்கிழமை இரவு இளவரசியின் பிள்ளைகள் வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீட்டுக்கு சென்றதும் அப்போது ஏன் சாப்பிட எதுவும் செய்யவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணப்பன் இளவரசியை கன்னத்திலும் தலையிலும் பலமாக அடித்ததில் இளவரசி சம்பவ இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

மேலும் பயந்து போன அவர் அவரது கழுத்தை நெருக்கி கை கால்கள் ஆகியவற்றை கட்டி சாக்குப்பைக்குள் அவரது உடலை போட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வைத்து வாழை இலைகளை முழுவதுமாக சுற்றி வாழைத்தாரை எடுத்துச் செல்வது போல் வடுக்குப்பம் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியில் உள்ள கல் குவாரியின் குளத்தில் வீசி விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இது குறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த புதுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு கொலையாளி கிருஷ்ணப்பனுடன் சென்று அவர் உடலை வீசிய இடத்தை அடையாளம் கண்டு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த இளவரசியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.

தொடர்ந்து பெண் மாயம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை நெட்டப்பாக்கம் போலீசார் கொலை வழக்காக மாற்றி உள்ள நிலையில் கிருஷ்னப்பனை இன்று மாலை நீதிபதி மூன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடுத்தனர்.

மேலும் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்த இளவரசியின் உடலை அவரது மகனை அழைத்து போலீசார் அடையாளம் காண செய்தனர்.

அப்போது அவர் மகன் தாயின் உடலை கண்டு கதறி அழுதார். புதுச்சேரியில் கள்ளகாதலனால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 472

    0

    0