துப்பாக்கி வெளியாகி 12 வருடம்… மொத்த வசூலை கேட்டா ஆடிப்போயிடுவீங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2024, 12:14 pm

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் முதன்முறையாக கூட்டணி போட்ட திரைப்படம் தான் துப்பாக்கி. விஜய் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த படம்.

சாதனை செய்த துப்பாக்கி

முதன்முறையாக விஜய் நடித்த படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் என பல சாதனைகளை துப்பாக்கி படம் நிகழ்த்தியுள்ளது.

thuppakki vijay

2012ஆம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியானது. படம் ரிலீசானதும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.

இதையும் படியுங்க: உங்களுடைய காலையை ஆரம்பிக்க இதைவிட சிறந்த ஒன்று இருக்க முடியுமா என்ன…???

ராணுவ வீரராக கனக்கச்சிதமாக பொருந்தியிருப்பார் விஜய். ராணுவ வீரர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தாலும் தனது நாட்டை காக்கும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார் என்பதையே இந்த படம் உணர்த்துகிறது.

வசூல் வேட்டை நடத்திய விஜய்

காஜல் அகர்வால், சத்யன், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்த துப்பாக்கி படம் இன்றுடன் வெளியாகி 12 வருடம் ஆகிறது.

vidyut

படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஆக்ஷன், இசை என செம கமர்ஷியல் படமாக உருவானது. இந்த படம் வெளியாகி மொத்தமாக ரூ.124 கோடி வசூல் வேட்டை செய்தது.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!