விரோதிகளாக அஜித் – பாலா:
கடந்த பல வருடங்களாகவே இயக்குனர் பாலா மற்றும் அஜீத்துக்கு இடையே மிகப்பெரிய சண்டை விரோதம் இருந்து வருகிறது. இந்த சண்டை எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று கேட்டீர்கள் ஆனால் இயக்குனர் பாலா அஜித்தை வைத்து நான் கடவுள் படத்தை இயக்குவதாக இருந்தார்.
அந்த படத்தின் ஷூட்டிங் கூட கிட்டத்தட்ட ஆரம்பித்து அஜித்தை வைத்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் எல்லாம் கூட இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது .
டிராப் ஆன நான் கடவுள்:
ஆனால் தயாரிப்பு தரப்பு மற்றும் பாலா அஜித் இவர்கள் மூன்று பேருக்கும் இடையே பணரீதியாக மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது. அதனால் அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது. நான் கடவுள் படத்தால் அஜித் மற்றும் இயக்குனர் பாலா இருவரும் சண்டை போட்ட விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்தது .
அஜித்துடன் மோதும் பாலா:
அப்போதிலிருந்து இப்போது வரை இவர்கள் இருவருக்கும் அந்த பிரச்சனை ஓயவும் இல்லை. அதை சரி செய்யவும் இல்லை. அந்த பகை அப்படியே தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த பிரச்சனைக்கு பிறகு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இனிமேல் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என நடிகர் அஜித் முடிவு எடுத்து விட்டார் .
விஷயம் இப்படி இருக்க பல வருடங்களுக்கு கழித்து இயக்குனர் பாலா தற்போது அஜித்துடன் நேரடியாக மோத களம் இறங்கி இருக்கிறாராம். ஆமாம் அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் வனங்கான் படத்தை அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் அதே நாளில் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம் இதனால் அஜித்தை ஒரு கை பார்த்து விடலாம் என்ற ஒரு நோக்கத்திலேயே இந்த படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக பாலா தரப்பு கூறியுள்ளது இதனால் வா நேருக்கு நேர் மோதி பார்த்து விடலாம் பாக்ஸ் ஆபிஸில்
பாக்ஸ் ஆபிஸில் யார் வெற்றி பெறுகிறோம் என்பதையும் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற ஒரு தில்லோடு இறங்கி இருக்கிறாராம் இயக்குனர் பாலா விரைவில் வணங்கான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என திரைத்துறை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது இருந்தாலும் பாலாவின் இந்த முடிவு அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்த்திடலாம் என அஜித் இன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்