ஒருத்தரும் ஒன்னும் கிழிக்கல… பணத்தை வாங்கிட்டு படுத்து தூங்குறாங்க – சினேகன் காட்டம்!

Author:
13 November 2024, 1:48 pm

பிக் பாஸ் சீசன் 8:

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடினாலும் பல பேருக்கு அவர்களின் விளையாட்டு பிடிக்கவில்லை.

vijay sethupathy

குறிப்பாக முதல் சீசனைப் போல இந்த நிகழ்ச்சி எல்லாம் பார்க்கவே முடியவில்லை. ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இருக்கும். தற்போது பார்க்கவே பிடிக்கவில்லை என ஆடியன்ஸ் பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டிகளில் கலந்து கொண்ட சினேகனும் தன்னுடைய கருத்தை அப்படியே முன் வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது,வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருத்தர் கூட விளையாடவே மாட்டேங்குறாங்க .

ரொம்ப மோசமா கேம் ப்ளே பண்றாங்க. விஜய் சேதுபதி கேம்பியரிங் நல்லா பண்றாரு. அவ்வளவு பணத்தை செலவு பண்ணி நிகழ்ச்சி எடுக்குறாங்க. பலவிதமான வசதிகள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் அப்படி இருக்கும்போது இவர்கள் சிறப்பாக விளையாடினால் என்ன? என சினேகன் கூறியுள்ளார்.

snehan

ஒருத்தரும் ஒன்னும் கிழிக்கல…

எல்லாருமே பெர்ஃபெக்டாக இருக்கிறோம் என்ற ஒரு எண்ணத்தில் தான் விளையாடுகிறார்கள். ரஞ்சித் மேல் கோபம் சொல்லிக் கொண்டே இருக்கிறாங்க. ஆனால், அதுதான் விளையாட்டு அவர் அடக்குவார் அதுதானே விளையாட்டு… அதை எப்படி நீங்கள் குற்றம் சொல்ல முடியும்? அதற்கு தானே இங்கே வந்திருக்கிறீர்கள்?என சினேகன் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இதற்காக தான் எங்களுக்கு முதல் சீசன் மிகவும் பிடித்திருந்தது. சினேகன் சிறப்பாக விளையாடிய நபர் என கூறி வருகிறார்கள்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!
  • Close menu