அந்த விசயத்திற்கு நான் சரிபடமாட்டேன் ..53 வயதில் நடிகர் நட்டி சொன்ன தகவல்…
Author: Selvan13 November 2024, 2:20 pm
சினிமாவில் திருமணம் ஒரு தடையா
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்து திருமணம் என்பது சர்சைக்குரியதாக இருந்து வருகிறது.அந்த வகையில் பல நடிகர் நடிகைகள் திருமண செய்யாமல் சினிமாவிற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர்.
இதில் பலருக்கு 40 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் பண்ணவில்லை.ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, திரிஷா, பூணம் பஜ்வா, நக்மா, கிரண், தபு, கோவை சரளா உள்ளிட்ட நடிகைகள் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்.நடிகர்களில் சிம்பு,விஷால் இன்னும் முரட்டு சிங்கிள் ஆகவே சுற்றி வருகின்றனர்.
நட்டியின் திருமண கேள்வி குறி
அந்த வகையில் நடிகரும் ஒளிப்பதிவாளரும் ஆன நட்டி என்கிற நடராஜன் வயது 53 ஆகியும் திருமணம் பண்ணவில்லை..இவர் முதலில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து பின்பு ஹீரோவாக அடியெடுத்து வைத்து மிளகா, சதுரங்கவேட்டை, முத்துக்கு முத்தாக, கர்ணன், நம்ம வீடு பிள்ளை, மஹாராஜா, பிரதர் என பல படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இதையும் படியுங்க: தொடர்ந்து பலி வாங்கும் இந்தியன்2 …அதிர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்..!
இவருக்கு நடிப்பதை காட்டிலும் ஒளிப்பதிவாளராக இருக்கவே அதிக விருப்பம்.விஜய் நடிப்பில் வெளியான யூத்,புலி போன்ற படங்களை நட்டி தான் ஒளிப்பதிவு பண்ணி இருப்பார்.இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார்.
பதிலடி கொடுத்த நட்டி
தற்போது சமீபத்தீய நேர்காணலில் தனக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்ற விளக்கத்தை சொல்லி இருப்பார்.அதில் அவர் சினிமா துறையில் படப்பிடிப்பு தளத்துக்கு முதலில் வருகிற நபரும், கடைசியாக போகிற நபரும் ஒளிப்பதிவாளர்தான்.
இந்த சூழ்நிலையில் கல்யாணம் செய்து கொண்டால், அவங்க நம்ம மேல ஒரு வித எதிர்பார்ப்புல இருக்கும் போது அதை நம்மால் முழுசா திருப்பி கொடுக்க முடியாது என்று நான் பயந்தேன். அதனால் தனிமையில் இருந்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று கூறி இருப்பார்.