பிஸ்கட் கொடுத்து கைக்குழந்தை கடத்தல்… தாயிடம் துருவித்துருவி விசாரணை!

Author: Hariharasudhan
14 November 2024, 3:43 pm

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தையைக் கடத்தியதாக பெறப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை, கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் ஆரோக்கியதாஸ் – நிஷாந்தி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நிஷாந்த் கர்ப்பம் அடைந்து உள்ளார். இதனையடுத்து, கடந்த 44 நாட்களுக்கு முன்பு சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், நிஷாந்தி வீட்டிற்கு பெண் ஒருவர் கடந்த ஒரு வாரமாகச் சென்று வந்து உள்ளார். இவ்வாறு வரும் இவர், தாய், சேய்க்கு அரசாங்கத்தில் ஊட்டச்சத்துப் பொருட்களை வாங்கித் தருவதாகக் கூறி உள்ளார். இதன்படி, நேற்று (நவ.13) காலை 10 மணிக்கு மேல், நிஷாந்திச் வீட்டிற்கு சென்ற அப்பெண், தாயுடன் குழந்தையையும் ஆட்டோவில் அழைத்துச் சென்று உள்ளார்.

இவ்வாறு சென்ற போது, தியாகராய நகரில் உள்ள ஒரு இடத்தில் தாய் நிஷாந்தியிடமிருந்து குழந்தையை வாங்கி உள்ளார். தொடர்ந்து, குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி வருவதாக அப்பெண் கூறிவிட்டு, குழந்தையோடு சென்ரு உள்ளார். ஆனால், வெகு நேரம் ஆன பின்னரும் அப்பெண் வரவில்லை.

இதனால், அதிர்ச்சி அடைந்த நிஷாந்தி, அந்தப் பகுதியில் அந்தப் பெண்ணையும், தனது குழந்தையையும் தேடி உள்ளார். ஆனால், அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, உடனடியாக அருகில் உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க: அரசாங்கம் கட்டினால் தப்பில்லை.. மக்கள் கட்டினால் இடிப்பதா? ஸ்கோர் செய்த செல்லூர் ராஜூ!

இந்தப் புகாரை கண்ணகி நகர் போலீசாருக்கு மாம்பலம் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிஷாந்தியிடம் ஆட்டோவில் ஏறிய இடம், யார் அந்த பெண் என்பது குறித்த தகவல்களை சேகரித்து குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், குழந்தை காணாமல் போனது குறித்து நிஷாந்தி கூறிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால், குழந்தை உண்மையாகவே கடத்தப்பட்டதா? அல்லது பணத்திற்காக விற்கப்பட்டதா உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சூனியத்தை எடுக்க அப்பெண் குழந்தையைக் கொண்டு சென்றதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?