சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?

Author: Selvan
14 November 2024, 9:25 pm

சினேகனின் சினிமா பயணம்

பாடலாசிரியராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி பின்பு நடிகர், அரசியியல்வாதி,பேச்சாளர் என பல வித திறமைகளால் மக்களை கவர்ந்தவர் கவிஞர் சினேகன்.

snehan weds kannika

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 2500 க்கு மேற்பட்ட பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.புத்தம் புது பூவே திரைப்படத்தில் தொடங்கி பாண்டவர் பூமி,ஆட்டோகிராப்,பகவதி,சாமி,கோவில்,பருத்திவீரன்,ஆடுகளம்,சூரரைப்போற்று, கருடன் என பல படங்களுக்கு பாடல் எழுதி ஹிட் கொடுத்தவர்.

பல புத்தகங்களும் எழுதி வெளியிட்டுள்ளார்.இவர் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரன்னராக வெற்றி பெற்றார்.

இதையும் படியுங்க: அடிமேல் அடி வாங்கும் விக்ரம்…சிக்கலில் அடுத்த படம் ..!

திருமண வாழ்க்கை

சில வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து கரம் பிடித்தார்.இவர்களுடைய வயது வித்தியாசத்தை பலரும் சமூக ஊடகங்களில் கேலி செய்து வந்த நிலையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒருவையொருவர் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

snehan care his wife

தற்போது சினேகன் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருக்கும் நிலையில்,அவருக்கு கால் அமுக்கி பணிவிடை செய்வது போல புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த பலர் புருஷனா இப்பிடி தான் இருக்கணும்…குடுத்து வச்ச மகராசி கன்னிகா என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?