மீண்டும் செந்தில் பாலாஜிக்கு செக்… அதிமுக கொடுத்த பரபரப்பு புகார்!
Author: Udayachandran RadhaKrishnan15 November 2024, 10:13 am
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக பரபரப்பு புகார் அளித்துள்ளது அரசியலில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் மின்மாற்றி கொள்முதல் செய்ததில் ₹400 கோடி முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஐடி பிரிவு மாநில இணை செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் புகார் அளித்துள்ளார். 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் வாங்க, ₹1,182 கோடி மதிப்பில் டெண்டர்கள் விடப்பட்டது.
இதையும் படியுங்க: கடவுள் உருவத்தில் ‘கமலாம்மா’…87 வயது மூதாட்டியின் நெகிழ வைத்த சம்பவம்!
10 டெண்டர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் மின்மாற்றிகள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லாமல், விதிகளை பின்பற்றாமல் டெண்டர் விடப்பட்டதே காரணம். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.