காமராஜரும் சர்வாதிகாரி தான்.. தம்பிகள் பிரச்னையில் சீமான் தடாலடி!

Author: Hariharasudhan
15 November 2024, 11:15 am
Quick Share

ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும் என நெல்லை நாதக கூட்ட சலசலப்புக்கு சீமான் பதிலளித்து உள்ளார்.

சென்னை: நெல்லை, பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (நவ.14) நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, அதில் பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகிற சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது குறித்து பேசினார். அப்போது, கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அப்போது பேச முயன்ற நெல்லை மாவட்ட நாதக நிர்வாகிகள், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, நெல்லை வி.கே.புரம் தனியார் திருமண மண்டபத்தில் சீமானை, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நாதக நிர்வாகிகளை வெளியேறச் சொன்னது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சீமான், “கட்சியின் தலைவர் என்பவர் அன்பான சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே கட்சியை சரியாக வழிநடத்த முடியும். சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது, கட்சி என்றால் ஒரு விதிமுறை உள்ளது, அதற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.

அப்படி பார்த்தால், காமராஜர், நேரு உள்ளிட்டோர் அன்பான சர்வாதிகாரிகள் தான். அவர்கள் அப்படி இருந்ததால் தான் கட்சி நன்றாக இருந்தது. ஒரு நேர்மையாளன் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும் என இறையண்பு புத்தகத்தில் உள்ளது” எனக் கூறி உள்ளார்.

SEEMAN ANGRY

முன்னதாக, கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் மட்டுமே பேசினார். கடைசியாக நான் எழுந்து, கட்சியில் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளைப் பற்றி பேச முயன்றேன். ஆனால், என்னைப் பேச விடாமல், ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும் தான் பேசுவேன்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..

அதுமட்டுமல்லாமல், ‘நீ யார்? சாதி அடிப்படையில் செயல்படுகிறாயா? வெளியே போ’ என திட்டினார். உடனடியாக நான் வெளியே வந்துவிட்டேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி செயலாளர் அந்தோணி விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்” எனத் தெரிவித்து உள்ளார்.

  • kubera movie update தனுசுக்கு உதவிய சூப்பர்ஸ்டார்..எப்படி மனசு வந்துச்சுனு தெரியல..குபேரவால் நடந்த சம்பவம்..
  • Views: - 54

    0

    0

    Leave a Reply