சமீப காலமாக திரைப்பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.அந்தவகையில் ரஜினிகாந்த் பற்றி நடிகை ஒருவர் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ரஜினி படத்தில் ரஜினியை எதிர்த்து நடிக்க பலரும் தயங்குவார்கள் அதிலும் குறிப்பாக நடிகைகள்,அருணாச்சலம் படத்தில் வில்லியாக நடித்துவிட்டு வடிவுக்கரசி பட்ட பாடு எல்லோருக்குமே தெரியும்.
ஆனால் படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிராக ரம்யா கிருஷ்ணன், நெகடிவ் ரோலில் பட்டைய கிளப்பி இருப்பார்.அதை பார்க்கும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு வித கோபம் இருந்தாலும் ரம்யாகிருஷ்ணனுக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
அதன் பின்பு ரஜினி நடித்த மன்னன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக விஜயசாந்தி நடிச்சிருப்பார்.
ஆரம்பத்தில் மன்னன் முழு கதையை கேட்டதும் “ஐயோ ரஜினியை அடிக்கிற மாதிரிலாம் நடிக்கனுமா என்னால முடியாதுனு” இயக்குனரிடம் சொல்லி இருக்கிறார்.
உடனே ரஜினி போன் செய்து என்னை அடிக்க உங்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. நீங்க மட்டும் தான் என்ன அடிக்கணும் சொன்ன பிறகு மன்னன் திரைப்படத்தில் விஜயசாந்தி நடிக்க ஒப்புக்கொண்டார்.
மேலும் படத்தின் 100வது நாள் வெற்றி விழா மேடையில் ரஜினி, என்னை அடிக்க தகுதி உள்ள நடிகை விஜயசாந்திதான் என்று கூறியிருப்பார்.