நயன்தாராவுக்கு ஆதரவு கொடுத்த நடிகைகள்… தனுஷ்க்கு எதிராக திரும்பும் திரையுலகம்.?!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2024, 2:18 pm
நயன்தாரா – தனுஷ் மோதல் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதலிக்க தொடங்கினர். இவர்களது திருமணம் 2022ஆம் ஆண்டு நடந்தது. பெரிய ரிசார்டில் நடந்த இந்த திருமணம் குறித்து வீடியோவை நெட்பிளக்ஸ் நிறுவனம் வெளியிட காத்திருந்தது.
ஆனால் நானும் ரவுடிதான் படத்தில் வரும் பாடலை நயன்தாரா திருமண வீடியோவில் உள்ளதால் அதற்கு அப்படத்தயாரிப்பாளரான தனுஷிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: 3 விநாடிக்கு ரூ.10 கோடி.. போலி முகமூடியில் தனுஷ்.. கிழித்தெடுத்த நயன்தாரா!
ஆனால் தனுஷ் 2 வருடமாக எதுவுமே சொல்லாத நிலையில், அப்படத்தில் உள்ள தங்கமே உன்னைத்தான் பாடலை 3 விநாடிகள் மட்டும் பயன்படுத்தியுள்ளனர். இந்த திருமண வீடியோ வரும் 18ஆம் தேதி நெட்டிபிளக்சில் ரிலீஸ் ஆகிறது.
ஆனால் படத் தயாரிப்பாளரான தனுஷ், நானும் ரவுடி தான் பட பாடலை பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நயன்தாராவுக்கு பிரபலங்கள் ஆதரவு
இதையடுத்து கொந்தளித்த நயன்தாரா, தனுஷ் மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் மீதான நயன்தாரா குற்றச்சாட்டு பிரபல நடிகைகள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் தனுஷ் உடன் நடித்த நடிகைகளான பார்வதி, நஸ்ரியா, மஞ்சிமா மோகன், அஞ்சு குரியன், அனுபமா பரமேஸ்வரன் ஆதரவு கொடுத்துள்ளதுதான்.