உங்க எலும்புகளை நான்  வலுவாக்குவேன்… கேரண்டி கொடுக்கும் ப்ரூன் பழங்கள்!!!  

Author: Hemalatha Ramkumar
16 November 2024, 6:03 pm

நாம் இதுவரை பெரிதாக கண்டுகொள்ளாத ப்ரூன் பழங்கள் நம்முடைய எலும்பு ஆரோக்கியத்திற்கு எத்தனை பெரிய நன்மையை தருகிறது என்று தெரிந்தால் நிச்சயமாக இதனை நீங்கள் இனியும் விட்டு வைக்க மாட்டீர்கள். ஆஸ்டியோபொரோசிஸ் இன்டர்நேஷனல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் தினமும் ப்ரூன்களை சாப்பிடுவதால் வயது தொடர்பான எலும்பு இழப்பு மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்டியோபொரோசிஸ் காரணமாக ஏற்படும் சவால்கள் 

ஆஸ்டியோபொரோசிஸ் என்பது குறைவான எலும்பு அடர்த்தி மற்றும் வலுவிழந்த எலும்பு அமைப்பு போன்றவை காரணமாக ஒரு நபருக்கு அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் ஒரு மோசமான நிலையாகும். நமக்கு வயதாகும் பொழுது நம்முடைய எலும்புகள் இயற்கையாகவே மெலிந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறும். அதிலும் குறிப்பாக பெண்கள் அவர்களுடைய மெனோபாஸை அடைந்த பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவுகள் குறைய ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் எலும்பு இழப்பை விரைவுப்படுத்துகிறது. இதனால் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகும். 

ப்ரூன்கள் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்சினையை சமாளிக்க உதவுமா?

ப்ரூன்கள் எலும்புகள் வலுவிழக்கும்  செயல்முறையை மெதுவாக்கி, எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை பாதுகாக்கும். 

எலும்புகளை வலுப்படுத்தி எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. 

மேலும் ப்ரூன்களில் காணப்படும் பயோஆக்டிவ் காம்பவுண்டுகள் எலும்பு இழப்பிற்கு காரணமான வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்திற்கு எதிராக செயல்படுகிறது. 

இதையும் படிக்கலாமே: தேங்காயை வைத்து வெயிட் லாஸா… செம ஐடியாவா இருக்கே!!!

எலும்புகளுக்கு ப்ரூன்கள் எப்படி நன்மை சேர்க்கிறது?

ப்ரூன்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்க கூடியவை. ப்ரூன்களில் மினரல்கள், வைட்டமின் K, பாலிபீனால் காம்பவுண்டுகள் மற்றும் உணவு நார்ச்சத்து இருப்பதால் இவை அனைத்துமே எலும்புகளை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.

ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ள ப்ரூன் பழங்களின் நன்மைகள் வீக்கத்தை குறைக்கிறது: எலும்பு இழப்புக்கு வழிவகுக்கும் வீக்கத்தை ப்ரூன்கள் விரைவாக குறைக்கிறது. 

எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது: எலும்பு அமைப்பை மேம்படுத்தி, அதனை வலுவாக மாற்றுவதன் மூலமாக எலும்புகளின் ஆரோக்கியத்தை ப்ரூன்கள் கவனித்துக் கொள்கிறது. 

எலும்பு தாது அடர்த்தியை அதிகரிக்கிறது: எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியமான காரணமாக அமையும் எலும்பு தாது அடர்த்தியை அதிகரிப்பதற்கு ப்ரூன்களை சாப்பிடலாம். 

எனவே மிகவும் சுவையான அதே நேரத்தில் திறமையான வழியில் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு ப்ரூன்கள் உதவுகிறது. 

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!