கங்குவா படுதோல்வி:
சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கடையில் வெளியாககி மோசமான விமர்சனத்தை சந்தித்து படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த நடிகை ஜோதிகா கணவர் சூர்யாவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பேசிய விஷயம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது .
அதாவது நான் இதை சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும் ஜோதிகாவாகவும் எழுதுகிறேன். நடிகராக இருப்பதற்காகவும் சினிமாவை முன்னோக்கி அழைத்துச் செல்லவும் சூர்யா போராடுவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
ஜோதிகா சப்போர்ட்:
இப்படத்தின் முதல் அரை மணி நேரம் வொர்க் அவுட் ஆகவில்லை. ஒலியும் சரியாக இல்லை தான். அதே சமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும். முழுமையான மூன்று மணி நேரத்தில் இருந்து முதல் அரை மணி நேரம் சரியில்லை தான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம்.
தமிழ் சினிமா இதுவரை கண்டுடாத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரை நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின்தொடர்வது இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு கூட இந்த அளவுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுக்கவில்லை .
படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சி போன்ற பாசிட்டிவான விமர்சனங்களை மறந்து விட்டார்கள். 3d தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவா எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது என ஜோதிகா கூறி இருந்தார் .
ஜோதிகாவை வெளுத்த சுசித்ரா:
அவரின் இந்த விமர்சனத்தை கையில் எடுத்திருக்கும் சுசித்ரா… ஜோதிகா ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். எந்த நினைப்பில் அதை எழுதினார் என்று தெரியவில்லை. முதல் அரை மணி நேரம் சரி இல்லை என்று சொல்லும் ஜோதிகா அரை மணி நேரம் கழித்து படத்துக்கு வர சொல்கிறாரா? இதில் என்ன லாஜிக் இருக்கிறது? கங்குவா பற்றி நான்சென்ஸ் ஆக போஸ்ட் போட்டு இருக்கிறார்.
ஏற்கனவே அந்த படம் இறங்கி போய்விட்டது. ஜோதிகா தன் பங்குக்கு மேலும் இறக்கிவிட்டு இருக்கிறார். அது ஒரு தவறான படம் என்று ஆகிவிட்டது. அதை விட்டு விட வேண்டியது தானே… சூர்யா ஒரு சிறந்த நடிகர் தான். ஆனால் அவர் சினிமாவை முதுகில் சுமந்து கொண்டு முன்னேறிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவரிடம் இல்லை . ஆனால் ஜோதிகாவோ சூர்யாவுக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் இருப்பதாக சொல்கிறார்.
நீ B** அணிந்து வந்தப்போவே தெரியும்:
அதேபோல் கங்குவா படத்தில் சூர்யாவின் நடிப்பை யார் பாராட்டவில்லை? அவர் effort போடவில்லை என்று யாராவது விமர்சித்தார்களா? ஜோதிகாவுக்கு சுத்தமாக படிப்பறிவே இல்லை. எதற்காக ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு நன்றி சொல்ல வேண்டும்? அடுத்ததாக அவர் படத்தில் நடிப்பதற்காகவா? சரியான சுயநலவாதி ஜோதிகா…. நீங்கள் ஏன் சூர்யாவை திருமணம் செய்து கொண்டீர்கள்? இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை.
நீங்கள் சூர்யாவுக்கு ஒரு மனைவியா “பேரழகன் பிச்சைக்காரி” ஜோதிகா மும்பையில் ஒரு விழாவில் உள்ளாடை மீது கோட் போட்ட போதே எல்லோருக்கும் உங்களைப் பற்றி தெரிய வந்தது. நீங்கள் காது கேட்காமல் கண் தெரியாமல் இருந்தது போல் பேசாமலும் இருங்கள்.வாயை மூடிக்கொண்டு சிலையாக மாறிவிடுங்கள் என சுசித்ரா கடுமையாக ஜோதிகாவை விமர்சித்திருக்கிறார்.