சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு பேரம்!

Author: Hariharasudhan
19 November 2024, 12:30 pm

ராணிப்பேட்டையில், தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதிக்கு உட்பட்ட காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப். இவரது மனைவி சப்ரின் பேகம். இவர்களுக்கு அல்வினா மரியம் என்ற மகள் உள்ளார். இதில் அல்தாப் தாசிப், சிட் பண்ட் மூலம் தீபாவளி பண்டிகைச் சீட்டு உள்ளிட்டவற்றை நடத்தி, அதில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகத் தெரிகிறது.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்தாப் தாசிப் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். அதேநேரம், இவரது சிட் பண்ட் அலுவலகத்தில் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வந்து உள்ளார்.

இவர், அல்தாப் தாசிப் குடும்பத்தினர் எங்காவது வெளியில் செல்ல வேண்டியிருந்தால், அவர்களை காரில் அழைத்துச் சென்று வருவதை வசந்தகுமார் வழக்கமாகக் கொண்டு இருந்து உள்ளார். இந்த நிலையில், ம்னைவி சப்ரின்பேகம் மற்றும் மகள் அல்வினா மரியம் ஆகிய இருவரையும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் அழைத்துச் செல்வதற்காக வசந்தகுமார் வந்து உள்ளார்.

பின்னர், காரில் சென்று கொண்டிருக்கையில், திடீரென வேலூர் நோக்கி கார் சென்று உள்ளது. இதனிடையே, நண்பர்களையும் உடனடியாக வரவழைத்த வசந்தகுமார், தாய் – மகள் இருவரையும் கடத்தி உள்ளார். பின்னர், சப்ரின் பேகத்தின் தாயாரான ஹயாத்தின் பேகத்துக்கு வாட்ஸ் அப் கால் செய்த வசந்தகுமார், தாயும், மகளும் கடத்தப்பட்டு இருப்பதைக் கூறி உள்ளார்.

RANIPET MOTHER AND DAUGHTER KIDNAP

அது மட்டுமல்லாமல், ரூ.1 கோடி பணம் வேண்டும் என்று கேட்ட வசந்தகுமாரிடம், அது தன்னால் முடியாது என ஹயாத்தின் பேகம் கூறி உள்ளார். அப்படியென்றால், ரூ.50 லட்சம் தருமாறும், அதில் முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாயை உடனடியாக தரவேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

இதையும் படிங்க: தவெக ஓட்டு யாருக்கு? திமுக அரசின் புது வியூகம்.. பறக்கும் Calls!

பின்னர், ஹயாத்தின் பேகம் இது குறித்து ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்து உள்ளார். பின்னர், போலீசாரின் அறிவுறுத்தலின்படி, கடத்தல் கும்பல் கேட்ட பணத்தை தர தயாராக இருப்பதாகவும், அதை வந்து ராணிப்பேட்டையில் வாங்கிக் கொள்ளும்படியும் ஹயாத்தின் பேகம் கூறி உள்ளார்.

எனவே, இதன்படி ராணிப்பேட்டைக்கு வந்த கடத்தல் கும்பலை, சினிமா பாணியில் துரத்திய போலீசார் அவர்களைப் பிடித்தனர். இதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலில் 7 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில், 7 பேரையும் கைது செய்த போலீசார், கடத்திச் செல்லப்பட்ட தாய், மகளையும் மீட்டனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  • Actor Removed From Thalapathy 69 தளபதி 69 படத்தில் இருந்து பிரபலம் திடீர் நீக்கம்… அரசியல் காரணமா? விஜய் மறைமுக உத்தரவு!
  • Views: - 42

    0

    0