போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம்.. தீக்குளிக்கவும் தயார் : திமுக அரசுக்கு மக்கள் எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan19 November 2024, 5:54 pm
திருவேற்காடு அடுத்த கோலடியை சேர்ந்தவர் சங்கர் கார்பெண்டராக வேலை செய்து வந்தார் கோலடி பகுதியில் இவருக்கு வீடு உள்ள நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் வீடுகளை அகற்றுவதற்காக நோட்டீஸ் ஒட்டினார்கள்
இதனால் தனது வீடு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் சங்கர் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது இறப்புக்கு நியாயம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவேற்காடு அயப்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதையும் படியுங்க: கோவில் கருவறையில் மது அருந்திய பூசாரி… போட்டோவுக்கு போஸ்.. ஷாக் வீடியோ!
வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், நகர் மன்ற தலைவர் உள்ளிட்டோர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் தற்போது வரை போராட்டத்தை வாபஸ் வாங்கவில்லை
திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நாசர், மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் எனவும் உயிரிழந்த சங்கரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய மாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்னர்.
500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்து வருவதால் போக்குவரத்து சேவை திருவேற்காடு கோலடி சாலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.