பிரபல அழகி, சூர்யா 44 படத்தில் சிறப்பு பாடலில் தோற்றம்!

Author: kumar
20 November 2024, 11:37 am

சூர்யாவுடன் முதன்முறையாக இணையும் ஸ்ரேயா சரண்!

சமீபத்தில் பான் இந்தியா படமான கங்குவாவில் நடித்த சூர்யா, இப்படத்தின் தோல்விக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்திற்கு தயார் ஆகிறார். சூர்யா 44 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படம் காதல் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்களை கொண்டதாக இருக்கும்.

Suriya 44 shriya Saran Dance

இதுவரை இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுவதாக பல்வேறு செய்திகள் பரவின. இந்நிலையில், அந்த பாடலை சிறப்பு அழகி ஸ்ரேயாவே நடித்ததாக இன்று அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பாடல் கோவாவில் அமைக்கப்பட்டு ஒரு அழகான செட்டிங்கில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பொங்கல் ரேஸ்: கேம் சேஞ்சருக்கு புதிய சவால்!

இன்னும் இளம் நடிகைகளுக்கு சவாலாக இருக்கும் ஸ்ரேயாவின் அழகும், நடனமும் ரசிகர்களுக்கு திரையரங்கில் விருந்தாக இருக்கும். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார், மற்றும் பூஜா ஹெக்டே சூர்யாவின் காதல் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

After kanguva Fop suriya hope in suriya 44

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், சில தகவல்களின் அடிப்படையில், படத்தை 2025 ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த மாபெரும் படத்தை தயாரித்துள்ளது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 163

    1

    0