SK23 -ல் சிவகார்த்திகேயன் செய்த செயல்..சந்தோஷத்தில் படக்குழு..!
Author: Selvan20 November 2024, 2:16 pm
அமரன் 300 கோடி கொண்டாட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான அமரன் திரைப்படம் தாறுமாறாக ஓடி வசூல் வேட்டையை குவித்து வருகிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் எந்த ஒரு படத்திற்கும் இவ்ளோ வரவேற்பும்,வசூலும் வந்ததில்லை.சமீபத்தில் 300 கோடி வசூலை நெருங்கிய அமரன் தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனை பெற்றுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படக்குழுவுடன்,அமரன் 300 கோடி வெற்றியை கொண்டாடி இருக்கிறார்.
படக்குழு அனைவருக்கும் சூடான,சுவையான பிரியாணி போட்டு அதனை சிவகார்த்திகேயனை பரிமாறு செய்திருக்கிறார்.
இதையும் படியுங்க: ரகுமான் போட்ட 3 கண்டிஷன் ..சாய்ரா கேட்ட கேள்வி…பிரிவிற்கு காரணமா?
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விக்ராந்த், ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
லட்சுமி மூவிஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்க,ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.