ஓட்ஸின் மகிமை: வெயிட் லாஸ், வெய்ட் கெயின் இரண்டுக்கும் ஒரே சொல்யூஷன்!!!
Author: Hemalatha Ramkumar20 November 2024, 5:24 pm
ஓட்ஸ் என்பது மிகவும் பிரபலமான ஒரு காலை உணவாக உள்ளது. முழுக்க முழுக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் ஒரு நபர் சிறந்த முழு தானிய உணவாக அமைகிறது. இந்த பதிவில் தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள்
ஓட்ஸில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் காணப்படுகிறது. குறிப்பாக இதில் தாவர அடிப்படையிலான பாலிபீனால்கள் காணப்படுகிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நம்முடைய ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வீக்கம் மற்றும் அரிப்பை போக்குகிறது.
ரத்த சர்க்கரை
கரையும் நார்ச்சத்து நிறைந்த ஒட்ஸ் இன்சுலின் விளைவை அதிகப்படுத்தி அதனால் ரத்த சர்க்கரையை குறைப்பதற்கு உதவுகிறது. வகை 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய ரத்த சர்க்கரையை பராமரிப்பதற்கு தினமும் ஓட்ஸ் சாப்பிடுவது உதவும்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்
ஓட்ஸ் நமக்கு குறைவான கலோரிகளை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகிறது. குறைந்த கலோரி உணவை சாப்பிட்டு அதே நேரத்தில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் ஒருவர் இதன் மூலமாக பெறலாம். உடல் எடையை குறைப்பதாக இருக்கட்டும் அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிப்பதற்காக இருக்கட்டும் இரண்டிற்கும் ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சிங்க், போலேட், காப்பர், வைட்டமின்கள் B1 மற்றும் B5 ஆகியவை காணப்படுகிறது.
கொலஸ்ட்ரால் அளவுகள்
தினமும் ஓட்ஸ் சாப்பிடுவது நம்முடைய உடலில் மொத்த கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும் என்று 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகிறது.
செரிமானம்
ஓட்ஸில் காணப்படும் பீட்டா-குளுகான் தண்ணீருடன் இணைந்ததும் ஒரு ஜெல்போன்ற பொருளாக மாறுகிறது. இந்த திரவம் வயிறு மற்றும் செரிமான பாதையின் ஓரங்களில் படிகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகிறது. இதனால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இதையும் படிக்கலாமே:
ஆண்களே! உங்கள் உதடுகளை சிகப்பழககோடு வைக்க உதவும் லிப்கேர் டிப்ஸ்…!!!
உடல் எடை
ஓட்ஸில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் இதனை சாப்பிட்ட உடனேயே நமக்கு உடனடியாக வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதனால் அதன் பிறகு நீங்கள் சிறிது நேரத்திற்கு எந்த ஒரு உணவையும் சாப்பிட மாட்டீர்கள். வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் ஒருவர் அடுத்தடுத்து சாப்பிடும் உணவுகளின் அளவுகள் குறையும். இதனால் உடல் எடையை குறைப்பதற்கு நினைக்கும் நபர்களுக்கு இது ஏற்றதாக அமைகிறது.
ஆஸ்துமா
ஆஸ்துமா என்பது பெரும்பாலும் குழந்தை பருவத்திலேயே ஏற்படக்கூடிய ஒரு பொதுவான நிலை. குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவது ஆஸ்துமா பிரச்சனையை மோசமாக்கலாம், அதே நேரத்தில் ஒரு சில உணவுகள் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரலாம். அந்த வகையில் ஓட்ஸ் சாப்பிடுவது ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்பது இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மிக பொதுவான மற்றும் மோசமான ஒன்று. ஓட்ஸில் நார்ச்சத்து இருப்பதால் இது மலத்தை மென்மையாக்கி அது எளிதாக வெளியேற உதவி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.