கோவை விமான நிலையத்தில் காலையிலேயே ஷாக்… அத்துமீறிய நபரால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan21 November 2024, 10:44 am
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவு சி.ஐ.எஸ்.எப் ஆய்வாளராக பணி புரியும் குமார் ராஜ் பரதன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்பொழுது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஒருவர் அனுமதி இன்றி நுழைந்து இருப்பதை கண்டு அறிந்தார் உடனடியாக அவரை பிடித்து ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.
இதையும் படியுங்க: காலையிலேயே ஷாக்.. வானளவு உயரும் தங்கம் விலை!
விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தருண் மாலிக் என்பதும், அவர் நகை தொழில் செய்து வருபவர் என்பதும் தெரிய வந்தது.
பின்னர் தருண் மாலிக் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.
விமான நிலைய பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்கான காரணம் ? அவரது நோக்கம் ? ஆகியவற்றை குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பலமுறை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டு இருப்பதால், இச்சம்பவம் விமான நிலையம் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.