ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் செரிமான கோளாறுகள்… இன்னும் என்னென்ன சொல்வாங்களோ தெரியலையே!!! 

Author: Hemalatha Ramkumar
21 November 2024, 11:01 am

பொதுவாக செரிமான பிரச்சனைகள் ஒரு சிறிய அசௌகரியமாக நமக்கு தோன்றலாம். ஆனால் அதனால் இதய நோய் உட்பட பல மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் ஒருவர் தெரிந்து கொள்வது அவசியம். இரைப்பை குடல் கோளாறுகள் அதிலும் குறிப்பாக மலச்சிக்கல் நாள்பட்ட ஒன்றாக இருந்தால் அது உங்கள் இதய அமைப்பிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். குடல் மற்றும் இதயம் ஆகிய இரண்டுமே பல்வேறு விதமான உடல் சார்ந்த செயல்பாடுகளால் இணைக்கப்பட்டுள்ளது. உடலில் உள்ள நுண்ணுயிரிகள் இதயத்திற்கு பிரச்சனை ஏற்படுத்த முக்கிய காரணமாக அமையும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. 

மலச்சிக்கல் போன்ற நாள்பட்ட செரிமான பிரச்சனைகள் வீக்கத்தை ஏற்படுத்தி அத்திரோஸ்க்லீரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மலம் கழிக்கும் போது தொடர்ச்சியாக சிரமம் ஏற்படுவது பொதுவாக மலச்சிக்கலோடு தொடர்புடையதாக அமைகிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து இதயத்திற்கு அழுத்தம் உண்டாகிறது. 

மலச்சிக்கல் எப்படி நம்முடைய இதயத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம்? 

மலம் கழிப்பதற்கு நாம் சிரமப்படும் பொழுது அது தற்காலிகமாக நெஞ்சு மற்றும் வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் எதிர்பாராத விதமாக ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத்திற்கு அழுத்தம் ஏற்படுகிறது. நாள்பட்ட மலச்சிக்கல் குடலின் அமைப்பை மாற்றி தமனிகளில் கொழுப்பு படிவதற்கு வழிவகுத்து அதனால் ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும் மலச்சிக்கல் பிரச்சனை வயதானவர்களில் அரித்மியா அல்லது பக்கவாதம் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. 

இதையும் படிக்கலாமே: பிரெட் சீஸ் பைட்ஸ்: ஒருமுறை செய்து கொடுத்து விட்டால் இனி இதுதான் உங்கள் குழந்தையின் ஃபேவரெட் ஸ்நாக்ஸ்!!!

பின்னணியில் இருக்கும் சைலண்ட் கல்ப்ரிட் வீக்கம் 

செரிமான கோளாறுகள் பெரும்பாலும் நமது உடலில் வீக்கத்தை ஏற்படுத்திவிடும். நாள்பட்ட மலச்சிக்கல் உதாரணமாக குடலில் நச்சு மிகுந்த பொருட்களுக்கு குடலை வெளிப்படுத்தலாம். இது குடல் ஆரோக்கியத்தை பாதித்து, அது வீக்கத்தின் அறிகுறிகளை அதிகரிக்கிறது. இது இதய நோயுடன் தொடர்புடையதாக அமைகிறது. 

இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் குறிப்புகள் 

செரிமான பிரச்சனைகளை தவிர்ப்பது உங்களுடைய மொத்த ஆரோக்கியத்தை குறிப்பாக உங்கள் இதயத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமான வயிறு மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவும் குறிப்புகள் சில இதோ: 

*பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவு எளிதாக மலம் கழிக்க உதவி, வீக்கத்தை குறைக்கிறது. 

*போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது. 

*உடற்பயிற்சி செய்வது செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அழுத்தத்தை குறைக்கிறது.

*அதிக உப்பு மற்றும் குறைவான நார்ச்சத்து கொண்ட உணவுகள் செரிமானம் மற்றும் இதய கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே தினமும் உப்பு சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள். மேலும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 108

    0

    0