பாலியல் அத்துமீறல் செய்த அரசுப் பேருந்து நடத்துனர்.. தர்மடியால் நிலைகுலைந்த நிலையில் மீட்பு!

Author: Hariharasudhan
21 November 2024, 11:55 am

குமரியில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பேருந்து நடத்துனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை அருகே உள்ள பயணம் பகுதியைச் சேர்ந்தவர் சசி. 54 வயதான இவர், அரசுப் பேருந்து நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்குச் சென்ற பேருந்தில் பணியில் இருந்து உள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த பள்ளி மாணவி ஒருவருக்கு நடத்துனர் சசி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். பின்னர், அவர் பள்ளிக்குச் செல்லாமல் நேராக தனது வீட்டுக்குச் சென்று உள்ளார். பின்னர் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பேருந்து ஞானையாபுரம் வந்த போது பேருந்தை சிறைபிடித்து உள்ளனர்.

Govt bus

இதனைத் தொடர்ந்து நடத்துனர் சசியை பிடித்து பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் சரமாரியாக அடிக்கத் தொடங்கி உள்ளனர். இதனிடையே, இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூதப்பாண்டி போலீசார், நடத்துனர் சசியை மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ஏ ஆர் ரகுமானுக்கு பரம்பரை நோய்…உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன் ..!

இதனையடுத்து, பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நடத்துனர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 134

    0

    0