நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா…தனுஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! குழப்பத்தில் திரையுலகம்..

Author: Selvan
21 November 2024, 1:11 pm

இறுதி கட்ட முடிவு

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்ற இரு மகன்கள் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனி பாதையில் பயணம் செய்ய தொடங்கினர்.

Dhanush-Aishwarya Legal Battle

நீதிமன்றத்திலும் தங்களுடைய விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர்.இதனால் இருவரும் இனி சேர வாய்ப்பில்லை என்று திரையுலகம் நினைக்கும் நேரத்தில் கடைசியாக இரண்டு முறை விசாரணைக்கு அழைத்தும் இருவரும் ஆஜராகவில்லை.

இதனால் ரசிகர்கள்,ஒரு வேளை இருவரும் சேர்ந்து வாழ முடிவு பண்ணிருப்பார்கள்,அதனால் ஆஜராகவில்லை என நினைத்து கொண்டிருந்தனர்.சில ஊடகங்களும் தனுஷ்,ரஜினிக்காகவும் மகன்களுக்காகவும் சேர்ந்து வாழ முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியிட்டனர்.

இதையும் படியுங்க: ஏ ஆர் ரகுமானுக்கு பரம்பரை நோய்…உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன் ..!

ஆஜராகிய ரஜினிகாந்த்

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதாவது தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் ஆஜராகமாட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகியுள்ளார்.

Aishwarya Rajinikanth Court Appearance

ஆனால் தனுஷ் ஆஜராகவில்லை. ஐஸ்வர்யா இப்போது ஆஜராகியிருப்பதால் ஒருவேளை தனுஷுடனான விவாகரத்து உறுதிதான் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் .இந்த வழக்கில் வரும் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

  • S. J. Surya director comeback மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர் :10 வருட இடைவெளிக்கு பிறகு எடுத்த திடீர் முடிவு…!
  • Views: - 140

    1

    0

    Leave a Reply