சினிமா பிரபலங்கள் விவாகரத்து எல்லாமே நாடகமா? காரணமே Sham Divorce தான்!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2024, 2:03 pm

திரை பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது போலியானது என தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சமீப காலமாக விவாகரத்து தொடர்ந்து நடந்து வருகிற. தனுஷ் – ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, ஏஆர் ரகுமான் – சாய்ரா பானு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

sham divorceக்காக போலி விவாகரத்து செய்யும் பிரபலங்கள்

திரைப்பிரபலங்களின் விவாகரத்து டிரெண்டாகி வருவது ஏன் என்பது பலருக்கும் புரியவில்லை. இதில் பலர் காதல் திருமணம் செய்து கொண்டவர்களே அதிகம்.

இந்த நிலையில் Sham Divorce என்ற ஹேஷ்டேக் X தளத்தில் டிரெண்டாகி வருகிறது. sham divorce என்றால் என்னவென்று விசாரித்த போதுதான் பிரபலங்களின் விவாகரத்து என்பது போலி என தெரியவந்துள்ளது.

Sham Divorce

அதாவது, கணவன் மனைவி இணைந்து வாழும் போது அவர்களின் வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு ஆண்டுதோறும் பல கோடி வரி செலுத்த வேண்டும்.

ஆனால் சட்டரீதியாக இருவரும் பிரிந்தால் இரண்டு பேர் செலுத்தும் வரி குறையும். சட்டரீதியாக இருவரும் பிரிந்தாலும் இணைந்து வாழும் முறை அல்லது உரிமை உள்ளது.

இதையும் படியுங்க: தளபதி 69-ல் இணைந்த வாரிசு நடிகை…! வீடு தேடி வந்த வாய்ப்பு..

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இது தவறு என்றாலும் இந்தியாவில் அதற்கு சட்டம் இல்லை. இந்தியாவில் விவாகரத்து பெற்றும் இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றம் கிடையாது.

AR Rahman Saira Banu

இதுதான் sham divorce என சொல்லப்படுகிறது. இந்த காரணத்தை வைத்துதான் பிரபலங்கள் விவாகரத்து அதிகமாகி வருவதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Tribute to late actors in Madha Gaja Raja movie பெரும் சோகத்தில் ரிலீஸ் ஆகும் மதகஜராஜா…படத்தில் நடித்த பல பிரபலங்களின் நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியுமா ..!
  • Views: - 307

    0

    0