வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் மாலை நேர பழக்கங்கள் இப்படி தான் இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
22 November 2024, 10:37 am

காலை பழக்கவழக்கங்கள் என்பது ஒரு நாளை சரியாக ஆரம்பிப்பதற்கான ஒரு அமைப்பை பெற்று தருவதற்கு உதவும். அதே வேளையில் ஒரு நபர் பின்பற்றக்கூடிய மாலை பழக்க வழக்கங்கள் அந்த நாளை வெற்றிகரமாக நிறைவு செய்து, அடுத்த நாளுக்கு தயாராவதற்கான உந்துதலை தருகிறது. அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல நபர்கள் பின்பற்றி வரும் மாலை பழக்க வழக்கங்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம். 

உங்கள் நாளை பற்றி சிந்தித்து பாருங்கள் 

ஒரு கடினமான நாளின் இறுதியில் ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அந்த நாளில் நீங்கள் சமாளித்த சவால்கள் மற்றும் சாதனைகளைப் பற்றி ஒரு முறை யோசித்துப் பாருங்கள். இதனை செய்வது உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும். மேலும் சரியாக நடைபெற்ற அனைத்து விஷயங்களுக்கும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்றுள்ள எல்லாவற்றிற்கும் நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை கொண்டிருங்கள். 

நாளைக்கான திட்டம்

உங்களுடைய யோசனைகளை ஒரு டைரியில் எழுதி அடுத்த நாள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்னுரிமை வாரியாக பட்டியலிட்டு எழுதிக் கொள்ளுங்கள். அடுத்த நாளுக்காக ஒரு தெளிவான இலக்கை அமைப்பது உங்களுடைய கவனத்தை ஒருநிலைப்படுத்தி அடுத்த நாள் காலை சோர்வோடு எந்த ஒரு முடிவையும் எடுப்பதை தவிர்க்க உதவும். 

தொழில்நுட்பத்தில் இருந்து விலகி இருத்தல் 

மாலை நேரத்தில் மொபைல் போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து விலகி ஆன்லைன் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு பதிலாக புத்தகம் வாசித்தல், டைரி எழுதுதல் போன்ற ஆஃப்லைன் செயல்பாடுகளில் நேரத்தை செலவு செய்யுங்கள். இது அந்த நாளை நிறைவு செய்து உங்களுக்கு மனதளவில் ஓய்வை கொடுக்கும். 

இதையும் படிக்கலாமே: குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை சவால் இல்லாமல் பூப்போல கவனிக்க உதவும் குறிப்புகள்!!!

வாசித்தல் 

பல வெற்றி பெற்ற நபர்களிடம் இருக்கும் முக்கியமான பொதுவான ஒரு பழக்கம் என்றால் அது நிச்சயமாக தினமும் புத்தகம் வாசிப்பதாக தான் இருக்கும். அது வேலைக்காக இருந்தாலும் சரி அல்லது மகிழ்ச்சிக்காக இருந்தாலும் சரி, இது இந்த உலகத்தைப் பற்றிய உங்களுடைய பார்வையை விரிவுபடுத்தி தேவையான அறிவுத்திறனை அளிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு ஓய்வையும் தரும். 

தியானம் 

உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி தூங்க செல்வதற்கு முன்பு தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைத்து உங்களை அமைதிப்படுத்தி, தூங்குவதற்கு தயார் செய்யும். 

தரமான தூக்கத்திற்கு தயார்ப்படுத்துதல்

ஒரு படுக்கை நேர வழக்கத்தை தினமும் பின்பற்றி, குறிப்பிட்ட ஒரு நேரத்தில் எல்லா நாளிலும் தூங்க செல்லுங்கள். இதனை தொடர்ச்சியாக நீங்கள் பின்பற்றும் பொழுது நல்ல ஆழ்ந்த மற்றும் தரமான தூக்கத்தை பெறலாம். 

அன்புக்குரியவர்களோடு நேரத்தை செலவழிப்பது

மாலை நேரங்களை உங்களுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து செலவிடுவது அவர்களுடனான உங்களுடைய பந்தத்தை வலுப்படுத்தும். இது உங்களை மகிழ்ச்சியோடு வைத்து வாழ்க்கையில் மன நிறைவான ஒரு உணர்வை கொடுக்கும். 

ஹெவி மீல்ஸ் அல்லது காஃபின் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும் 

மாலை நேரத்திற்கு பிறகு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது காஃபின் கலந்த வானங்களை குடிப்பது உங்களுடைய செரிமானத்தை பாதித்து, தூக்கத்திலும் தலையிடலாம். எனவே அதற்கு பதிலாக எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை டின்னருக்கு சாப்பிடுங்கள். மேலும் ஹெர்பல் டீ குடிப்பது உங்களுக்கு நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…