புயல் வேகத்தில் அதிகரிக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan22 November 2024, 11:08 am
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 225 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, தங்கம் விலை கடும் சரிவைச் சந்தித்தது. ஆனால், அடுத்த சில நாட்கள் 100 ரூபாய்க்கு மேல் தங்கம் விலை அதிகரித்து ஷாக் கொடுத்தது. ஆனால், அடுத்த ஒரு வார காலத்திற்கு தங்கத்தை தாராளமாக வாங்கிவிடலாமே என்றவாறு மளமளவென குறைந்து வந்தது.
ஆனால், தற்போது மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, இன்று (நவ.22) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 225 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் மாலை நேர பழக்கங்கள் இப்படி தான் இருக்கும்!!!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றமில்லாமல் 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.