முக்கிய முடிவெடுக்கும் தவெக.. புத்தாண்டில் புதிய நகர்வு!

Author: Hariharasudhan
22 November 2024, 12:44 pm

2025, ஜனவரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணி முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அப்போதே அது பரபரப்பாக பேசப்பட்டது. காரணம், ரஜினிகாந்த அரசியலில் நுழையாமலே அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியது தான்.

அதேநேரம், கமல்ஹாசன் கட்சி தொடங்கினாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் என்பதே வேறு. ஆனால், விஜய் இளைஞர்கள் முதல் குடும்ப வாக்கு மற்றும் அடுத்த தலைமுறை வாக்காளர்களையும் வைத்து இருப்பவர். இந்த நிலையில் தான் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட, விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது.

அப்போது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை விஜய் அறிவித்தார். அதில், திமுகவை தனது அரசியல் எதிரி எனக் கூறிய விஜய், ஊழல், லஞ்சம் ஆகியவற்றை அதன் காரணிகளாக எடுத்து வைத்தார். அது மட்டுமல்லாமல், திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்றும் விஜய் கூறினார். இவ்வாறு தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய்யின் பேச்சு அரசியல் மேடையில் விவாதத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில், தற்போது கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் நியமனம் போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தமிழகம் முழுவதும் தவெக மாவட்டச் செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான பட்டியலையும் தயார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

VIJAY IN EDUCATIONAL FUNCTION

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மொத்தம் 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, மதுரையில் தலைமைச் செயலகம் கிளை அமைக்கப்படும் என தனது செயல்திட்டத்தில் அறிவித்த விஜய், இவ்வாறு 100 மாவட்டங்களாக பிரிப்பது என்பது புதுமையாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்த் பட பாணியில் கொலை.. தாய், மருமகள் சேர்ந்து மகனைக் கொன்ற கொடூரம்!

இதன்படி, 2025 ஜனவரி முதல் வாரத்திற்குள் தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாவட்டம், ஒன்றியம், கிளை, பேரூராட்சி, நகர்மன்றம் உள்ளிட்ட அனைத்து வகையிலான நிர்வாகிகளையும் நியமிக்க உள்ளனர்.

இதன் மூலம் வலுவான உள்கட்டமைப்போடு தமிழக வெற்றிக் கழகம் உருமாறும் என தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். தற்போது விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளே, மாவட்ட அளவிலான பொறுப்பில் நீடித்து வருகின்றனர். மேலும், மாநாட்டிற்காக தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 52

    0

    0

    Leave a Reply