இந்த சீசனுக்கு வெந்நீர்ல குளிக்கிறது நல்லா தான் இருக்கும்… ஆனா அதனால இப்படி கூட பிரச்சினை வரலாம்!!!
Author: Hemalatha Ramkumar22 November 2024, 12:56 pm
குளிர்காலம் வந்து விட்டதால் நம்மில் பலர் வெந்நீரில் தினமும் குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் அவ்வாறு தினமும் வெந்நீரில் குளிப்பது உங்களுடைய சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லதா என்பதை ஒரு முறை யோசித்துப் பாருங்கள். வெந்நீரில் குளிப்பது நமக்கு இதமானதாக இருந்தாலும் அது நாளடைவில் நம்முடைய சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சூடான தண்ணீர் சருமம் மற்றும் மயிர் கால்களில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி சருமத்தை வறண்டு போக செய்து, அதில் எரிச்சலை உருவாக்குகிறது.
இதனால் சருமம் இறுகி அதில் வெள்ளை திட்டுக்கள் உருவாகலாம். அதேபோல உங்களுடைய தலைமுடியை பொறுத்தவரை வெந்நீரானது மயிர்க்கால்களை வலுவிழக்க செய்து, அதனை எளிதில் உடைந்து போக செய்கிறது. எனினும் ஒருவேளை உங்களால் குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்க முடியாவிட்டால் வெந்நீருக்கு பதிலாக நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தலாம். அது உங்களுடைய இயற்கை எண்ணெய்களின் சமநிலையை பராமரித்து சருமம் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே வெந்நீருக்கு பதிலாக குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் ஏன் குளிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் மாலை நேர பழக்கங்கள் இப்படி தான் இருக்கும்!!!
தலைமுடி சேதம்
தினமும் வெந்நீரில் குளிப்பது உங்கள் தலைமுடியில் உள்ள கெரட்டினை உடைத்து, தலைமுடிக்கு பாதுகாப்பு வழங்கும் க்யூட்டிக்கிள் அடுக்கிற்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் தலைமுடி வறண்டு எளிதில் உடைந்து போகும்.
தலைமுடி உதிர்வு
வெந்நீரில் குளிப்பது தலை முடியின் வேர்களை பாதித்து, அதனால் நாளடைவில் தலைமுடி உதிர்வு ஏற்படலாம்.
இளநரை
வெந்நீரில் குளிப்பதால் தலைமுடியானது சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் ஆக்சிடேட்டிவ் சேதத்திற்கு ஆளாகி அதனால் இளநரை பிரச்சனை உருவாகலாம்.
வறண்ட சருமம்
வெந்நீரில் குளிப்பதால் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்யைகள் முழுவதும் அகற்றப்பட்டு, சருமம் வறண்டு, அரிப்பு நிறைந்ததாக மாறும்.
வலுவிழந்த சரும பாதுகாப்பு தடை வெந்நீரானது சருமத்தின் இயற்கை தடையை உடைத்து சருமத்திற்கு எரிச்சல் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களிடமிருந்து பாதுகாக்கும் தடைக்கு சேதம் ஏற்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.