மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!

Author: Selvan
22 November 2024, 8:31 pm

அடுத்தடுத்து சிக்கலில் நயன்தாரா

நடிகை நயன்தாரா அவருடைய திருமண ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி இருந்தார்.அதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் தனுஷ்.

நயன்தாரா சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட்,ஷேர் மார்க்கெட்,அழகு சாதன பொருட்கள் என பல விதமான பிசினஸ் செய்து வருகிறார்.ஆறு மாதங்களுக்கு முன்பு 9 skins என்ற அழகு சாதன நிறுவனத்தை தொடங்கினார்.

இதையும் படியுங்க: போதைப் பழக்கத்தை தூண்டுகிறதா? நிறங்கள் மூன்று படத்தின் திரை விமர்சனம்…!

இப்போது இந்த நிறுவனத்திற்கு தடை போட்டு கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்த நிறுவனத்தின் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக மலையாளத்தில் இடம் பெற்ற பிரபலமான ஆல்பம் பாடலை பயன்படுத்தியுள்ளனர்.

அதை முறைப்படி நயன்தாரா அனுமதி பெறாமல் பயன்படுத்தியதால்,அந்த ஆல்பம் சம்பந்தப்பட்டவர்கள் கேரளாவில் கேஸ் போட்டுள்ளனர்.இதனால் நயன்தாரா இதற்கு முறைப்படி பதில் கூற வேண்டும் அல்லது அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது.

கரிங்காலி பாடல்

ஏற்கனவே இந்த ஆல்பத்தை பகத் பாசில் நடித்த ஆவேசம் படத்தில் பயன்படுத்திய பிறகு கரிங்காலி ஆல்பம் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.முறையான அனுமதி வாங்கிய பின்னரே ஆவேசம் படத்தில் பாடல் இடம்பெற்றது.

தற்போது நயன்தாரா எந்த அனுமதியும் வாங்காததால் அவருக்கு கூடுதலாக ஒரு தலைவலி பிரச்னை வெடித்துள்ளது.

  • amazon prime bagged jana nayagan movie for 115 crores ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…