தினமும் 15 நிமிடங்கள் செலவு செய்தாலே போதும்… சுவாச ஆரோக்கியம் பற்றி கவலையில்லாமல் இருக்கலாம்!!!
Author: Hemalatha Ramkumar23 November 2024, 1:34 pm
காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றில் கலந்துள்ள தீங்கு விளைவிக்கும் நச்சு பொருட்கள் சுவாச பிரச்சனைகள், நுரையீரல் சேதம் மற்றும் ஆஸ்துமா போன்ற மோசமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனினும் நாம் எடுக்கக்கூடிய சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக இந்த பெரிய ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். உதாரணமாக, முகமூடி அணிந்து வெளியே செல்வது, தினமும் நீராவி இழுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் போன்றவை இதில் அடங்கும்.
அந்த வகையில் தினமும் வெறும் 15 நிமிடங்கள் நீராவி இழுத்தல் மூலமாக நமக்கு எப்பேர்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், காற்று மாசுபாட்டில் இருந்து தப்பிக்கவும் இது ஒரு சிறந்த வழியாக அமைகிறது. மாசுபட்ட காற்றில் நிறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்கள் மற்றும் பொருட்கள் நம்முடைய சுவாச பாதையில் எரிச்சலை ஏற்படுத்தி, மூக்கடைப்பு, தும்மல், இருமல் மற்றும் பிற உடல்நல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கலாம். நீராவியை சுவாசிக்கும் பொழுது அது நுரையீரல்களில் உள்ள சளியை தளர்த்தி, சுவாச பாதைகளை திறந்து, தொண்டையை ஆற்றி, மாசுபாடு காரணமாக ஏற்பட்ட அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் தருகிறது. அந்த வகையில் தினமும் நீராவியை சுவாசிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: குளிர்காலத்துல வெயிட் லாஸுக்கு கிடைக்கும் இந்த பழங்களை மிஸ் பண்ணிடாதீங்க!!!
சிறந்த சுவாச ஆரோக்கியம்
சுவாச பாதையில் உள்ள கிருமிகள் மற்றும் வைரஸுகளை அகற்றுவதற்கான எளிமையான வழிகளில் நீராவி இழுத்தல் ஒன்று. அதுமட்டுமல்லாமல் இது நம்முடைய சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு விதமான தொற்றுகளுக்கு தீர்வு தருகிறது.
சளியை குறைக்கிறது
நீராவி நம்முடைய நுரையீரலில் உள்ள சளியை உடனடியாக தளர்த்தி, மெல்லியதாக்கி அதனை நம்முடைய சுவாச அமைப்பில் இருந்து எளிதாக வெளியேறுவதற்கு உதவுகிறது.
சைனஸ் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்
ஒருவேளை நீங்கள் சைனஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயமாக தலைவலி, தொண்டை வலி மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் அறிகுறிகள் இருக்கும். நீராவி இழுத்தல் இது மாதிரியான அறிகுறிகளில் இருந்து உங்களுக்கு முற்றிலும் நிவாரணம் தருகிறது.
மூக்கடைப்பை போக்குகிறது
நீராவியை சுவாசிக்கும் பொழுது அது சைனஸ் மற்றும் சுவாச பாதைகளை விரிவடைய செய்து, மூக்கடைப்பிலிருந்து தற்காலிக நிவாரணம் தருகிறது.
எரிச்சலை ஆற்றுகிறது
வீக்கம் நிறைந்த தொண்டை மற்றும் சுவாச பாதைகளுக்கு தேவையான நிவாரணத்தை நீராவி தருகிறது. வழக்கமான முறையில் இதனை நீங்கள் செய்து வந்தால் எரிச்சலில் இருந்து விடுபடலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.