உன்கிட்ட சொத்து இல்ல.. அப்போ இதச் செய்.. பாலியல் இச்சைக்கு அனுப்புவதாக மருமகள் புகார்

Author: Hariharasudhan
23 November 2024, 2:31 pm

கொடைக்கானலில் ஏழ்மை நிலையை வைத்து தனது மாமியார் குடும்பத்தினர் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடச் சொல்வதாக மருமகள் புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்தவர் 25 வயது பெண். இவருக்கும், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இதில் உதயகுமாரின் மனைவி ஏழ்மை நிலையில் உள்ளவர்.

இந்த நிலையில், உடுமலைப்பேட்டை காவல் நிலையம் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அப்பெண் புகார் ஒன்றை அளித்து உள்ளார், அதில், “எனது கணவர் உதயகுமார். இந்த நிலையில், உதயகுமாரின் குடும்பத்தினர், என்னை வசதி வாய்ப்பு அற்றவர் எனக் கூறி, அவர்களுக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேலுச்சாமி என்பவர் உடன் பாலியல் ரீதியாக உடன் இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு வற்புறுத்துகின்றனர்.

SEXUAL TORTURES

ஆனால், அதற்கு தான் இணங்க மறுத்தேன். இதனால் தன்னை காரில் கடத்தி தொழிலதிபரின் கெஸ்ட் ஹவுஸில் கட்டாயப்படுத்தி பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ள மாமியார் சுமதி முயற்சிக்கிறார். நான் இது தொடர்பாக எனது கணவர் மற்றும் மாமனார் ஞானசேகரன் ஆகியோரிடம் தெரிவித்தேன்.

இதையும் படிங்க: தனுஷ் வாழ்க்கையில் புகுந்த நயன்தாரா.. தூண்டில் போட்டு தூக்கிய துணை இயக்குநர்!

ஆனால், அவர்களும் இந்த விவகாரத்தில் உடந்தையாக செயல்பட்டதால், வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளேன். எனவே, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 135

    0

    0