திருமணத்தில் நாகசைதன்யா – சோபிதாவுக்கு விருப்பமில்லை.. பரபரப்பை கிளப்பிய நாகர்ஜூனா!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2024, 6:17 pm

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சமந்தாவுடன் திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தது அனைவரும் அறிந்ததுதான்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு பிறகு, சில ஆண்டுகளாகவே அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது, நாக சைதன்யா புதிய காதலியாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார்.

சமீபத்தில் இருவரின் நிச்சயதார்த்தம் அமைதியாக நடைபெற்றது. திருமணம் டிசம்பர் 4 அன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நாகார்ஜுனா, தனது மகனின் திருமணத்தைப்பற்றி பேட்டி ஒன்றில் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Nagarjun Chiatanya sobhita

“என் மகன் மற்றும் மருமகளுக்கு மிகப்பெரிய ஆடம்பர திருமணத்தில்தான் விருப்பம் இருக்கவில்லை. அதனால், திருமண ஏற்பாடுகளை அவர்களே பார்த்துக்கொள்வதற்காக என்னிடம் அனுமதி கேட்டனர். நான் அவர்கள் முடிவுக்கு ஆதரவு அளித்து, ‘தயவு செய்து நீங்கள் விரும்பும் போல் செய்க,’ என்று கூறினேன்.

இதையும் படியுங்க: வசூலில் பாகுபலியை மிஞ்சிய புஷ்பா 2 : பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகும் அல்லு அர்ஜூன்!

நான் விரும்புவது ஒரே ஒரு விஷயம், திருமணத்தில் பாரம்பரிய இந்திய திருமண சடங்குகளும், புனித மந்திரங்களும் இடம்பெற வேண்டும். அதேபோல், மருமகள் சோபிதாவின் குடும்பத்தினரும் இதையே விரும்புகின்றனர், என நாகார்ஜுனா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த செய்திகள் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்து, வரவிருக்கும் திருமணத்தை அனைவரும் எதிர்பார்க்க வைத்துள்ளன.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 90

    0

    0