பிரக்னன்சி டெஸ்டிற்கு முன்னரே உங்க கர்ப்பத்தை கன்ஃபார்ம் பண்ண உதவும் அறிகுறிகள்!!!

Author: Hemalatha Ramkumar
23 November 2024, 7:53 pm

நீங்கள் ஒரு கருவை சுமக்கிறீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு கர்ப்ப பரிசோதனை என்பது நிச்சயமான ஒரு வழியாக இருந்தாலும் அதனை செய்வதற்கு முன்பே ஒரு சில அறிகுறிகள் மூலமாக கர்ப்பத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும். ஒரு சிலருக்கு பரிசோதனை செய்யும் வரை காத்திருப்பது சிரமத்தை அளிக்கலாம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். எனவே கர்பத்திற்கான ஆரம்ப கால அறிகுறிகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

மார்பகத்தில் இறுக்கம்

ஆமாம், மார்பகம் இறுக்கமாகவும், மெல்லியதாகவும் இருப்பது கர்ப்பத்திற்கான ஆரம்பகால அறிகுறியாக அமைகிறது. சில நேரங்களில் கனமான மார்பகங்களும் கர்ப்பத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். 

குமட்டல் 

காலை நேரத்தில் குமட்டல் ஏற்படுவது கர்பத்திற்கான முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் உங்களுக்கு காலையில் மயக்கமாகவும், வாந்தி வருவது போலவும் இருந்தால் அது கர்ப்பத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். 

வயிற்று வலி 

வயிற்று வலி என்பது வழக்கமான மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படக்கூடியது தான். ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் கூட அழைக்கப்படாத விருந்தாளியாக வயிற்று வலி ஏற்படலாம். குழந்தையை தக்க வைப்பதற்கு உங்களுடைய கர்ப்பப்பை விரிவடைவதன் காரணமாக இது ஏற்படலாம். 

ஒரு சில உணவுகளுக்கான ஆசை மற்றும் வெறுப்பு

ஒரு சில உணவுகளை உங்களுக்கு சாப்பிட வேண்டும் போன்ற உணர்வுகள் மற்றும் நன்றாக சாப்பிட்டு வந்த உணவுகளை வெறுப்பது போன்ற உணர்வுகள் கர்ப்பத்திற்கான ஆரம்ப அறிகுறிகள். 

வயிற்று உப்புசம் 

நீங்கள் நன்றாக சாப்பிட்டு, ஆனால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வயிறு உப்புசமாக இருந்தால் அதற்கு காரணம் புரோஜஸ்டரான் ஹார்மோனாக இருக்கலாம். மெதுவான செரிமான அமைப்பு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை கர்ப்பத்திற்கான ஆரம்பகால அறிகுறிகள். 

வழக்கத்தைவிட உடல் சூடு

அதிகமாக இருப்பது உங்களுடைய உடல் வெப்பநிலையை அளவிடுவதன் மூலமாக உங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தலாம். நீங்கள் ஓய்வு நிலையில் இருக்கும்பொழுது உங்களுடைய உடல் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் புரோஜஸ்டரான் ஹார்மோன் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும். 

இதையும் படிக்கலாமே: மெலிந்த தோற்றத்திற்கு குட்-பை சொல்லிட்டு ஈசியா வெயிட் கெயின் பண்ணுங்க!!!

எல்லா நேரத்திலும் சோர்வாக இருப்பது 

சோர்வு அதிகமாக இருப்பது கர்ப்பத்திற்கான மிகப் பொதுவான அறிகுறிகளில் ஒன்று. நீங்கள் வழக்கமான வேலைகளை செய்து கொண்டு அன்றாட செயல்பாடுகளை செய்யும் போது அளவுக்கு அதிகமாக சோர்வாக இருப்பது உங்கள் உடலில் அதிகப்படியான ஹார்மோன்கள் உற்பத்தியாவதன் காரணமாக ஏற்படுகிறது. இது கர்ப்பத்திற்கான அறிகுறி. 

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படுவது கர்ப்பத்தை குறிக்கும். 

ஸ்பாட்டிங் 

வழக்கமான மாதவிடாயைப் போல லேசான ரத்த கசிவு அல்லது ஸ்பாட்டிங் இருப்பது கர்ப்பத்திற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Dhruv Vikram Love Success actress is becoming Vikram's daughter-in-law வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!