கவர்ச்சியில் மின்னும் கீர்த்தி சுரேஷ்…கல்யாணத்திற்கு முன்னாடி இதெல்லாம் ரொம்ப தப்புமா..!
Author: Selvan24 November 2024, 6:48 pm
கவர்ச்சியை கையில் எடுத்த கீர்த்தி சுரேஷ்
தமிழ் ரசிகர்களை தன்னுடைய ஹோம்லியானா நடிப்பால் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.இவர் மகா நடி படத்தில் சாவித்திரியாக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திருப்பார்.இப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார்.
தமிழில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டிற்கு பறந்திருக்கிறார்.இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் ஜொலித்து வருகிறார்.
தற்போது “பேபி ஜான்” படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார்.சமீபத்தில் இந்த பாடலின் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
இதையும் படியுங்க: சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோ..! பிரிவிற்கு காரணம் இது தானா..?
“நைனா மட்டக்கா” என்ற பாடலில் கீர்த்தி சுரேஷின் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும்.அவர் வரக்கூடிய ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் கண் சிமிட்டாமல் பார்க்கும் அளவிற்கு இருக்கிறது.
இத்தனை காலம் ஹோம்லி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிற்கு சென்றதும் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.அவருடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷுஅடுத்த மாதம் தன்னுடைய நீண்ட நாள் நண்பனை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.