சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!

Author: Selvan
24 November 2024, 8:35 pm

வாய்ப்பு தேடி அலைந்த SK

தமிழ் சினிமாவில் தற்போது விஜய்,அஜித்துக்கு அடுத்ததாக கோலிவுட்டை கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, ஆனால் இவர் சினிமாவிற்கு வரதுக்கு முன்னால் பிரபல சின்னத்திரை நடிகரான தீபக்கிடம் சென்று எனக்கும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.

Sivakarthikeyan and Deepak untold story

பாதையை மாற்றிய தீபக்

அப்போது தீபக் சின்னத்திரையில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருந்தார்.சிவகார்த்திகேயன் வாய்ப்பு கேட்டவுடன் உனக்கு சீரியல் எல்லாம் செட் ஆகாது.நீ படத்தில் நடிக்கும் பணியை மட்டும் பாரு என்று சொல்லியுள்ளார்.

அந்த நிகழ்வை சமீபத்தில் ஒரு பேட்டியில் தீபக் பகிர்ந்திருப்பார் அதாவது “அந்த காலத்தில் எல்லாம் சீரியலில் நடித்தால் படங்களில் நடிக்க முடியாது.அதனால் நான் அந்த மாதிரி சொன்னேன்.

இதையும் படியுங்க: “கங்குவா” படத்தால் நடந்த விபரீதம்…அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம் ..!

பின், ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனும் நானும் கலந்து கொண்ட போது, சிவகார்த்திகேயன் இது குறித்து பேசும்போது தான் எனக்கு நான் சொன்னது நினைவுக்கு வந்தது. அதற்கு சிவா என்னிடம் நன்றியும் தெரிவித்தார்” என்று கூறியிருப்பார்.
.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!