கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2024, 9:42 am

நடிகர் அஜித் நடித்துவரும் பிரம்மாண்ட திரைப்படம் குட் பேட் அக்லி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க, அர்ஜுன் தாஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்க: சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், இதற்கு முன் புஷ்பா 2 போன்ற பெரிய படங்களையும் தயாரித்துள்ளது.

இறுதிக்கட்டத்தில் படப்பிடிப்பு :

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுடன், இன்னும் ஒருவாரம் மட்டும் பணிகள் எஞ்சியுள்ளன. படப்பிடிப்பு முடிந்ததும், பின்னணி வேலைகளைத் தொடங்கி, படத்தை 2025 பொங்கல் திருவிழா காலத்துக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் மாற்றம்:

இந்நிலையில், அப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பணியில் இயக்குனர் ஆதிக் திருப்தியடையாத காரணத்தால், அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Good Bad Ugly Team Call Anirudh to join

முதலில் அனிருத் இசையமைப்பாளராக வர வாய்ப்பிருந்தது, ஆனால் அவரது கால்ஷீட் காரணமாக அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இதனால், ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இறுதி செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் ஆதிக் – ஜிவி கூட்டணி :

இதற்கு முன்பு, ஆதிக் இயக்கிய மார்க் ஆண்டனி படத்துக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும், ஆதிக்கின் நெருங்கிய நண்பர் என்பதால், ஜிவி இந்தப் படத்தில் இசையமைப்பதை ஏற்கவேண்டியது. இது மட்டுமல்லாது, ஜிவி பிரகாஷ் மற்றும் அஜித் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதும் சிறப்பு. கடைசியாக, ஜிவி 2007-ல் வெளியான கிரீடம் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

GV Prakash Joined in Good Bad Ugly Movie

குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்குப் பெரிய திருவிழாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 160

    0

    0