என் செல்லத்த என்ன பண்ணீங்க? வளர்ப்பு பிராணிக்கு நேர்ந்த கொடுமை!

Author: Hariharasudhan
25 November 2024, 1:50 pm

கோவையில் வளர்ப்பு பிராணியை மருத்துவமனையில் விட்டுச் சென்ற நிலையில், அந்த நாய் உயிரிழந்தது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரத். இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய பெற்றோர் குணசேகரன் – குமார். இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இவருடைய தங்கை சுருதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்து உள்ளது.

இதன்படி, கடந்த நவம்பர் 22ஆம் தேதி, கோவை ஜென்னி ரெசிடென்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், இவர்கள் சஞ்சு என்ற நாயை கடந்த 11 ஆண்டுகளாக வளர்த்து வந்து உள்ளனர். இதனிடையே, திருமண வரவேற்பு நிகழ்ச்சி இருப்பதால் அந்த நாயை பராமரிப்பதற்காக, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள விலங்குகள் நல மருத்துவமனையில் ஒரு நாள் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கூறி, கடந்த நவம்பர் 21ஆம் தேதி காலையில், நாயை கொடுத்து விட்டுச் சென்று உள்ளனர்.

அதற்கு கட்டணமாக 1,200 ரூபாயும் செலுத்தி உள்ளனர். அப்போது, அந்த நாயை மருத்துவர்கள் சுரேந்தர் மற்றும் கோபிகா ஆகிய இருவரும் கவனித்துக் கொள்வதாக கூறி அனுப்பி உள்ளனர். இந்த நிலையில், அன்று மாலையே மருத்துவமனையில் இருந்து சரத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்து உள்ளது. அப்போது, உங்களுடைய நாய்க்கு உடல்நலம் சரியில்லை, எனவே உடனடியாக வருமாறு தெரிவித்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தனது தாய், தந்தையுடன் உடனடியாக சரத் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்று உள்ளார். அப்போது அங்கு அவருடைய செல்லப் பிராணியாக வளர்த்த நாய் இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் மற்றும் அவருடைய பெற்றோர், மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: தனி இணையதளம் என்னாச்சு? கோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி திமுகவை தட்டிக் கேட்ட விஜய்!

இந்த நிலையில், சரத் இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். போலீசார் புகாரின் பேரில், சி.எஸ்.ஆர் போட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.இந்த நிலையில், மருத்துவமனை சென்று தனது செல்லப் பிராணியை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுத வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 348

    0

    0