இன்னைக்கு அள்ளுங்க தங்கத்த.. அதிரடியாக குறைந்த விலை!

Author: Hariharasudhan
26 November 2024, 11:09 am

சென்னையில் இன்று (நவ.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலைத் தொடர்ந்து சரிவைச் சந்தித்த தங்கம் விலை, தற்போது அதிரடியாக உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, சவரன் 58 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. ஆனால், இன்று அதிரடியாக குறைந்து 56 ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் விற்பனை ஆகிறது.

Gold and silver price today

இதன்படி, இன்று (நவ.26) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த இடம் அவளுக்காக.. சமந்தாவை கேவலப்படுத்திய நாக சைதன்யா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 585 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 3 ரூபாய் குறைந்து 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ