உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக கிடைப்பதற்கு இந்த சமையல் முறையை பின்பற்றுங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
26 November 2024, 7:52 pm

உங்களுடைய உடலுக்கு தேவையான போஷாக்குகளை வழங்குவதற்கான எளிமையான மற்றும் ஆரோக்கியமான வழிகளில் ஒன்று உணவை வேக வைத்து சாப்பிடுவது. வேகவைத்த உணவில் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தக்கவைக்கப்படுகின்றன. மேலும் பொரித்த அல்லது அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட  உணவுகளுடன் ஒப்பிடும் பொழுது இதில் அதிக கொழுப்புகள் மற்றும் எண்ணெய் இருக்காது. ஆனால் வேகவைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? இதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீராவியில் வேகவைக்கும் செயல்முறையானது பொருட்களின் இயற்கை நறுமணத்தை மாற்றாமல் அதே நேரத்தில் அவை செரிமானம் ஆவதற்கு எளிமையானதாக இருந்து, குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் காய்கறிகள், பீன்ஸ் வகைகள், முட்டை, மெலிந்த இறைச்சிகள் போன்றவற்றை வேக வைப்பதற்கு இது ஒரு சிறந்த முறையாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வது உடல் எடையை கட்டுப்படுத்தவும், நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும். இப்போது நீராவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நம்ப முடியாத பலன்கள் பற்றி பார்க்கலாம். 

செரிமானம் ஆவதற்கு எளிதாக இருக்கும்

நீராவியில் வேக வைக்கப்பட்ட உணவுகள் காய்கறிகள் மற்றும் புரதங்களில் உள்ள கடினமான நார் சத்துக்களை உடைத்து உணவை மென்மையாக்கி, உடல் அதனை செரிமானம் செய்வதற்கு எளிமையாக மாற்றுகிறது. 

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு கிட்சன்ல அசால்ட்டா தூங்கிகிட்டு இருக்க இந்த பொருள் BPக்கு மருந்தா இருக்கும்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டீங்க!!!

குறைவான கலோரிகள்

பொதுவாக நீராவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளில் பொரிக்கப்பட்ட உணவுகளுடன் ஒப்பிடுகையில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருக்கும். இதனால் உடல் எடையை குறைப்பவர்களின் பயணத்தில் இந்த உணவு சிறந்த தேர்வாக அமைகிறது. 

தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் 

வேக வைக்கப்பட்ட உணவுகளில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவற்றை வேக வைகாக அதிக வெப்பம் கொண்ட சமையல் முறைகள் பயன்படுத்தப்படுவதில்லை. 

ஊட்டச்சத்துக்கள் தக்கவைக்கப்படுகிறது 

நீராவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே தக்கவைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நீரில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் C மற்றும் D காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் சிறந்த முறையில் தக்கவைக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து தக்கவைப்பை அதிகப்படுத்துவதற்கு நீங்கள் உணவை வேக வைக்கும் பொழுது அதற்கு சரியான தண்ணீர் ஊற்ற வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Suriya Bike Ride with Actress Photos Viral சூர்யாவுடன் பைக்கில் சுற்றும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் VIDEO!
  • Views: - 11

    0

    0

    Leave a Reply