40 வயது நபரை மணந்த 20 வயது பெண்.. கொடூரமாக வெட்டி வீசிய உறவினர்கள்.. கர்நாடகாவில் பயங்கரம்!

Author: Hariharasudhan
29 November 2024, 11:37 am

கர்நாடகாவில் 20 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 40 வயது நபரி பெண்ணின் உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரதுர்கா: கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா அருகே உள்ள கோணனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (40). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஷில்பா என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் ஷில்பா தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு ஷில்பாவை தற்கொலைக்குத் தூண்டியதாக, மஞ்சுநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுநாத் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார். அப்போது மஞ்சுநாத்திற்கும், அவரது சமூகத்தைச் சேர்ந்தவரும், அதே ஊரைச் சேர்ந்தவருமான 20 வயது இளம்பெண்ணுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்தப் பழக்கம் பின்னாளில் காதலாகவும் மாறி உள்ளது. ஒருகட்டத்தில், இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்து உள்ளது. அப்போது, மஞ்சுநாத் – இளம்பெண் இருவரின் வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி, அப்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Karnataka man murder and six arrested

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுநாத்தும், அந்தப் பெண்ணும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இதனை அறிந்து கோயிலுக்குச் சென்ற இளம்பெண்ணின் பெற்றோர், முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக பேசி, இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், நேற்று (நவ.28) மஞ்சுநாத்தின் வீட்டிற்கு இளம்பெண்ணின் உறவினர்கள் சென்று உள்ளனர். அப்போது, அங்கு இருந்த மஞ்சுநாத், அவரது தந்தை சந்திரப்பா மற்றும் தாய் அனுசுயா ஆகிய மூன்று பேரையும் மரக்கட்டைகள், அரிவாளால் சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் எனக்குத் தெரியும்.. மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கியது எப்படி?

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மஞ்சுநாத், அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், மஞ்சுநாத் மற்றும் படுகாயத்துடன் இருந்த அவரது பெற்றோரை மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில், மஞ்சுநாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற பரமசாகரா போலீசார், இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 128

    0

    0