இசைவாணி விவகாரம்.. ஹைதராபாத்தில் இருந்தது ஏன்? கஸ்தூரி பளீச் பதில்!

Author: Hariharasudhan
29 November 2024, 1:55 pm

இசைவாணி விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை பார்க்கிறோம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

சென்னை: சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்தும், குறிப்பாக தெலுங்கு பேசும் பெண்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதற்கு தெலுங்கு அமைப்புகள் கண்டனங்களும் தெரிவித்தன.

அந்த வகையில், ஐக்கிய நாயுடு சம்மேளனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சென்னை எழும்பூர் போலீசார், கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிமன்றக் காவல் வழங்கிய நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில், அவர் தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த நிலையில், நிபந்தனையின் பேரில் கையெழுத்திடுவதற்காக எழும்பூர் காவல் நிலையத்துக்கு கஸ்தூரி வந்தார்.

பின்னர் கையெழுத்து போட்டுவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்தூரி, “நான் கடந்த 4 வருடங்களாக ஹைதராபாத்தில் தான் உள்ளேன். எனது வீடும் அங்கு தான் உள்ளது. தற்போது 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறேன். இதனால் அங்கு இருந்தபோது என்னை தமிழக போலீசார் கைது செய்தனர்.

Kasthuri in Conditional bail

என்னுடைய வேலை, வீடு, மகனின் படிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் மீதான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி எனது வழக்கறிஞர் மூலம் முறையிட்டு உள்ளேன். இதன் மீதான விசாரணை திங்கள்கிழமை வருகிறது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, இசைவாணி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூர கொலை.. இபிஎஸ் முக்கிய கேள்வி!

அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, “இந்த விவகாரத்தில் நடவடிக்கை இல்லை. என் மீதான கைது நடவடிக்கைக்கும், இசைவாணி விவகாரத்திலும் உள்ள நிலைமை அனைவருக்கும் தெரியும்” எனக் கூறிவிட்டுச் சென்றார். ஐயப்பன் குறித்தான பாடலில் ஐயப்பனை இழிவுபடுத்தியதாக இசைவாணி மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 133

    0

    0