காருக்கு அடியில் நிறைமாத கர்ப்பிணி… துடித்துடித்து உயிரிழந்த பெண் காவலர்!
Author: Udayachandran RadhaKrishnan29 November 2024, 1:56 pm
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் விமலா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். மேலும் தற்போது அவர் ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இந்நிலையில் இவர் பள்ளத்துபட்டியில் உள்ள தனது வீட்டிலிருந்து இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மண்டையூர் காவல் நிலையத்திற்கு பணிக்குச் சென்றபோது எதிரே வந்த கார் விமலாவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: இசைவாணி விவகாரம்.. ஹைதராபாத்தில் இருந்தது ஏன்? கஸ்தூரி பளீச் பதில்!
இந்நிலையில் ஒன்பது மாதம் நிறைமாதமான கர்ப்பிணி பெண் காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து மண்டையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.