சொர்கவாசல் கதை
குடும்ப மற்றும் காதல் பின்னணியில் உருவாகியுள்ள சொர்கவாசல் திரைப்படம் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதனுடன் பொருத்தமான தீர்வுகளின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
கதை 1999 காலகட்டத்தில் நடைபெறுகிறது.இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி,பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தனது அம்மாவுடன் சேர்ந்து பிளாட்பாரத்தில் ஒரு சிறிய உணவுக்கடை நடத்தி வருகிறார்.
அவர் ரேவதி என்ற பெண்ணை காதலித்தும் வருகிறார்.தனது கடையை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்ல வங்கியில் லோன் வாங்க முயற்சி செய்கிறார்.இப்படி தன்னுடைய திருமணம்,தொழில் இரண்டையும் மனதில் வைத்து கொண்டு ஓடும் ஒரு சாதாரண இளைஞனாக ஆர்.ஜே.பாலாஜி இருந்து வரும் சூழலில்,அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு அதிகாரி உதவி செய்கிறார்.
இதையும் படியுங்க: ஆல் ஏரியா நம்ம தா…விடாமல் துரத்தும் விடாமுயற்சி…டீசரில் புது சாதனை !
திடீரென அந்த அதிகாரி சில மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்.இந்த கொலைக்கு ஆர்.ஜே.பாலாஜி தான் காரணம் என அவரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.உண்மையில் கொலை செய்தது யார்? சிறையில் ஆர்.ஜே.பாலாஜிக்கு என்ன ஆச்சு என்பதே சொர்க்கவாசல் படத்தின் கதை.
சிறை மொத்தத்தையும் தன்னுடைய ஒரே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி செல்வராகவன் கதைக்கு இன்னொரு பக்க பலமாக இருக்கிறார்.
அவருடன் சிறை கண்காணிப்பாளர் கருணாஸ்,ஓய்வு பெற்ற நீதிபதியாக நட்டி,காதலியாக நடித்துள்ள சானியா ஐயப்பன் ஆகியோர் படத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சியில் அற்புதமாக நடித்துள்ளனர்.படம் முழுவதும் இருக்க கூடிய சிறை காட்சிகளை கதைக்கு ஏற்றாற்போல் நகர்த்தி செல்கிறார் இயக்குனர் சித்தார்த்.
கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.மொத்தத்தில் சொர்கவாசல் ஒரு சீரிய கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒரு நல்ல குடும்பப் படமாக அமைந்துள்ளது.