காலா படத்தால் தனுஷ்க்கு வந்த வினை… அப்போ விவாகரத்துக்கு இதுதான் காரணமா…!
Author: Selvan30 November 2024, 10:50 am
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:”காலா”படம் தோல்வி காரணமா?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓராண்டுக்கு முன்னாடியே பிரிவதாக வழக்கு தொடர்ந்தனர்.தற்போது ஒரு சில நாட்களுக்கு முன்பாக குடும்ப நல நீதிமன்றம் இவர்களுக்கு இறுதி தீர்ப்பை வழங்கியது.
ஆனால் இவர்களுடைய பிரச்னை 3 ஆண்டுகளுக்கு முன்பாக ரஜினியின் வீட்டில் இருந்ததே ஆரம்பித்து விட்டது என பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் ரஜினியை வைத்து காலா படத்தை தயாரித்தார்.இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கினார்.காலா படத்தில் ரஜினிக்கு சம்பளம் 200 கோடி என பேசப்பட்டது.
இதையும் படியுங்க: லப்பர் பந்து நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..தட்டி தூக்கிய ஆர்.ஜே.பாலாஜி..!
ஆனால் படம் வெளியாகி மிகப் பெரிய தோல்வியை தழுவியது,தனுசுக்கு 80 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் ரஜினிக்கு கொடுக்க வேண்டிய 200 கோடியும் தனுஷ் கொடுக்கவில்லை. அதனால் ரஜினி மனைவி லதா தனுஷிடம் ரஜினிக்கு வரவேண்டிய 200 கோடி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வீடு மற்றும் கடன் பிரச்னை விவகாரம்
காலா படத்தின் பெரும் தோல்வியால் தனுஷால் அவ்ளோ பெரிய தொகையை கொடுக்கமுடியவில்லை.அடுத்தடுத்து கடன்களில் சிக்கி வந்த தனுஷ் பல கடன்களை வாங்கி போயஸ் கார்டனில் பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டினார்.
இதனால் சுதாரித்த ரஜினி பேமிலி,தனுஷின் கடனால் தன்னுடைய இரண்டு பேரன்களுக்கு பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து தனுஷை பிரித்ததாக அந்த பேட்டியில் பத்திரிகையாளர் பாண்டியன் கூறியிருப்பார்.