ஆம்புலன்சில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சகோதரி செய்யக் கூடாத செயல்!

Author: Hariharasudhan
30 November 2024, 3:46 pm

ம.பியில் ஆம்புலன்சில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெளகஞ்ச்: மத்திய பிரதேச மாநிலம், மௌகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று, அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உடன் ஆம்புலன்சில் பயணித்து உள்ளனர். அந்த ஆம்புலன்சில், இவர்கள் மட்டுமல்லாது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரும் இருந்துள்ளனர்.

முக்கியமாக, இவர்களில் யாரும் நோயாளிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆம்புலன்சை நிறுத்தி, சிறுமியின் சகோதரியும், அவரது கணவரும் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் எனக் கூறிவிட்டு இறங்கி உள்ளனர். ஆனால், தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்ற இருவரும் வருவதற்குள் ஆம்புலன்ஸ் அந்த சிறுமியோடுப் புறப்பட்டு உள்ளது.

இதன் பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுரின் கூட்டாளியான ராஜேஷ் கேவாட் என்பவர் ஆம்புலன்சில் வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து, அன்று இரவு முதல் சிறுமியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மறுநாள் காலையில் வேறு ஒரு இடத்தில் சாலையோரத்தில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் மிகவும் சோர்வான நிலையில் வீட்டுக்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரேந்திர சதுர்வேதி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த ராஜேஷ் கேவாட் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: படுக்கை வரை வந்த முகநூல் நண்பர்.. குளிக்கச் சென்ற நேரத்தில் செய்த காரியம்!

மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, இந்தச் சம்பவம் நடைபெற்ற அதே பகுதியில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தேனிலவுக்குச் சென்ற தம்பதியில், புதுமணப் பெண்ணைக் கடத்திச் சென்று, 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 120

    0

    0